TN Corona cases : தமிழ்நாட்டில் 5 ஆயிரத்து 755 பேருக்கு கொரோனா பாதிப்பு: 150 பேர் மரணம்!
சென்னையில் மட்டும் இன்று கொரோனா வைரசால் 350 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர பிற 36 மாவட்டங்களில் 5,405 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக இன்று 5,755 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 6,162 நபர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று அதற்க்கும் குறைவாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 24,55,332 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,31,127 ஆக உயர்ந்துள்ளது.
#TamilNadu #COVID19Update | 25.06.2021
— National Health Mission - Tamil Nadu (@NHM_TN) June 25, 2021
State Dashboard @MoHFW_INDIA @RAKRI1 @DoHFWTN @TNDPHPM@pibchennai @TNDME1 @104_GoTN @PIB_India#tn_together_againstcorona #stopcoronatn pic.twitter.com/OE2qviFR0B
சென்னையில் மட்டும் இன்று கொரோனா வைரசால் 350 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர பிற 36 மாவட்டங்களில் 5,405 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்றைய நிலவரப்படி, கொரோனாவால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1343 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24,55,332. 14,35,730 நபர்கள் ஆண்கள் ஆவர். பெண்கள் மட்டும் 10,19,564 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் மட்டும் 3,297 நபர்கள் ஆவர். பெண்கள் 2,458 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மட்டும் 8,132 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 23,75,963 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 150 ஆக பதிவாகியுள்ளது. நேற்று 155 நபர்கள் உயிரிழந்த நிலையில், இன்று 150 நபர்களாக உயிரிழப்பு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று உயிரிழந்தவர்களில் 55 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள், 95 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 32,051 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் கொரோனா வைரசால் 8143 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் 25 பேர் எந்தவித இணை பாதிப்பும் இல்லாதவர்கள் ஆவர்.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினசரி குறைந்து வருவதையடுத்து, தமிழகத்தில் ஊரடங்கு விதிகளில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அளித்துள்ளது. இதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )