தமிழகத்தில் 8 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் ஒரேநாளில் 8 ஆயிரத்து 449 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

FOLLOW US: 

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை பரவி வருவதாக கூறப்படும் நிலையில், தினசரி தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 419, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 30 பேர் என 8 ஆயிரத்து 449  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.  கடந்தாண்டு ஜூலை 27ஆம் தேதி அதிகபட்ச அளவாக 6 ஆயிரத்து 993 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. 97ஆயிரத்து 201 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒரே நாளில் தொற்று 8 ஆயிரத்து 449 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 71 ஆயிரத்து 384 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் 8 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு சென்னையில் 2 ஆயிரத்தை தாண்டியது கொரோனா

சென்னையில் ஏற்கெனவே இரண்டாயிரத்து  558 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று இரண்டாயிரத்து 636 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 77 ஆயிரத்து 300 ஆக அதிகரித்துள்ளது. 

செங்கல்பட்டில் 795 பேரும், கோவையில் 583 பேரும், திருவள்ளூரில் 453 பேரும், தஞ்சாவூரில் 151 பேரும் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும்,  காஞ்சிபுரத்தில் 303 பேரும், திருச்சியில் 273 பேரும், திருப்பூரில் 227 பேரும், சேலத்தில் 214 பேரும் மதுரை மற்றும் வேலூரில் 167 பேரும், திருவாரூரில் 121 பேரும் பாதிக்கப்பட்டனர். ராணிப்பேட்டையில் 179 பேரும், கிருஷ்ணகிரியில் 167 பேரும், ஈரோட்டில் 132 பேரும், திருவண்ணாமலையில் 125 பேரும், நாமக்கல்லில் 109 பேரும், விழுப்புரத்தில் 54 பேரும் பாதிக்கப்பட்டனர்.

உயிரிழப்பு

கொரோனா காரணமாக  இன்று 33 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 032 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 15 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 18 பேரும் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இணை நோய்கள் ஏதும் இல்லாத 4 பேர் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் 8 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 61,000-ஐ தாண்டியதுதற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 61 ஆயிரத்து 593 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் நாலாயிரத்து 920 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 8 லட்சத்து 96 ஆயிரத்து 759 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இரண்டாவது நாளாக 12 வயதிற்குட்பட்ட 250க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 5ஆம் தேதி 128 சிறுவர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் தற்போது மேலும் அதிகரித்துள்ளது.

Tags: Corona Tamilnadu update deaths Recovered

தொடர்புடைய செய்திகள்

130 அடி போர்வெல் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்ட தமிழ்நாட்டு ஐ.பி.எஸ் அதிகாரி முனிராஜ்..!

130 அடி போர்வெல் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்ட தமிழ்நாட்டு ஐ.பி.எஸ் அதிகாரி முனிராஜ்..!

55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணிவழங்க வைகோ கோரிக்கை..!

55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணிவழங்க வைகோ கோரிக்கை..!

டெல்டா மாவட்டங்களில் 70 சதவிகிதம் தூர்வாரும் பணி நிறைவு பெற்றுள்ளது : வேளாண்துறை அமைச்சர் தகவல்

டெல்டா மாவட்டங்களில் 70 சதவிகிதம் தூர்வாரும் பணி நிறைவு பெற்றுள்ளது : வேளாண்துறை அமைச்சர் தகவல்

திருவண்ணாமலை : குறைந்துவரும் தொற்று எண்ணிக்கை : தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் அதிகரிப்பு..!

திருவண்ணாமலை : குறைந்துவரும் தொற்று எண்ணிக்கை : தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் அதிகரிப்பு..!

பி.இ., பி.எல் படிப்புகளிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு? - நீதிபதி முருகேசன் ஆணையம் அமைப்பு

பி.இ., பி.எல் படிப்புகளிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு? - நீதிபதி முருகேசன் ஆணையம் அமைப்பு

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!