MK Stalin: கூட்டணிக் கட்சிகளுக்கு கல்தா... தலைமைக்கே பல்பு கொடுக்கும் வேட்பாளர்கள்! - திமுக அவசர ஆலோசனை
திமுக தலைமையின் முடிவை எதிர்த்து நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர் பதவிகளுக்கு போட்டியிட்டது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக கடந்த மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இந்தத் தேர்தலின் முடிவுகள் கடந்த மாதம் 22ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் திமுக 21 மாநகராட்சியில் வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் வெற்றிப் பெற்றவர்கள் இம்மாதம் 2ஆம் தேதி பதவியேற்றனர். இன்று நகர்ப்புற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்டவற்றின் மேயர், துணை மேயர், தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மேயர், தலைவர் உள்ளிட்ட பதவிகளை திமுக ஒரு சில இடங்களில் தன்னுடைய கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு செய்திருந்தது. ஆனால் அந்த இடங்களில் திமுக வேட்பாளர்கள் சிலர் தலைமையின் முடிவிற்கு எதிராக போட்டியிட்டு வெற்று பெற்றுள்ளனர். இந்தச் சூழலில் கட்சி தலைமையின் முடிவை எதிர்த்து போட்டியிட்டது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை செய்து வருகிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்