MK Stalin ‘மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்’ என்ன ஆச்சு திமுக தலைவருக்கு..?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைகளுக்காக அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளதாகவும், பரிசோதனைகள் முடிந்தவுடன் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், மருத்துவமனை தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளிவராததால் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து திமுகவினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
காலையில் ஆக்டிவாக இருந்த முதல்வர்
இன்று காலை அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா அந்த கட்சியில் இருந்து விலகி அறிவாலயம் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். அப்போது அவரை இன்முகத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்ற வீடியோ வெளியானது. இந்நிலையில், திடீரென அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளது ஏன் என்ற கேள்வி எழுந்தாலும், தொடர் சுற்றுப் பயணத்தை முதல்வர் மேற்கொள்ளவுள்ளதால், அவரது உடல்நலன் குறித்து பரிசோதித்துக் கொள்ளவே முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
திருப்பூர் பயணம் ரத்தா ? முதல்வர் ஓய்வு எடுக்கப் போகிறாரா ?
நாளை திருப்பூர் மற்றும் பொள்ளாச்சிக்கு முதல்வர் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், அவர் திடீரென மருத்துவமனைக்கு சென்றிருப்பதால் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டப்படி அவர் திருப்பூருக்கு செல்வாரா அல்லது மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் முதல்வர் ஓரிரு நாட்களுக்கு ஓய்வில் இருக்கப் போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)





















