சிறுகுறு தொழில் கடனைச் செலுத்த கால அவகாசம் : முதலமைச்சரின் கடிதம் சொல்வது என்ன?

கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்குவது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநரை வலியுறுத்தக் கோரி பிற மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சிறுகுறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் சிறு கடனாளர்கள் ஒரு காலாண்டுகளுக்குக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்குவது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநரை வலியுறுத்தக் கோரி பிற மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில், ‘கொரோனா பெருந்தொற்றால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில்கொண்டு, குறு சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் சிறு கடனாளர்கள் இரு காலாண்டுகளுக்கு கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்குவது தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆகியோரை வலியுறுத்த வேண்டுமெனக் கோரி, 17 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று (8-6-2021) கடிதம் எழுதியுள்ளார்


அக்கடிதத்தில், தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதற்கான மிகச்சரியான ஒற்றைப் பேரமைப்பாக ஒன்றிய அரசே செயல்பட வேண்டும் என்னும் கருத்தினை மாநில முதலமைச்சர்கள் பலர் சுட்டிக்காட்டினோம் என்றும், ஒன்றிய அரசே முழு அளவில் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்றும் நாம் வலியுறுத்திய நிலையில் நம் அனைவரின் கூட்டு முயற்சிகளின் காரணமாக, மாண்புமிகு இந்தியப் பிரதமர் தனது முந்தைய கொள்கையை நேற்று மாற்றியமைத்துள்ளார் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


இத்தகைய சூழ்நிலையில் கடனாளர்களை குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் சிறு கடனாளர்களை கொரோனா பெருந்தொற்றின் முதலாவது மற்றும் இரண்டாவது அலைகளின்போது வெவ்வேறு தன்மைகளில் நடத்தும் பிரச்சினை தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் மீண்டும் ஒன்றிணைய வேண்டியது அவசியமென மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 2021 ஏப்ரல் ஜூன் மாதங்களில் உள்ளூர் நிலைமைகளின் அடிப்படையில் அந்தந்த மாநில அரசுகளால் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையின்போது கடனாளர்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரனம் போன்ற நிவாரணம் தற்போது அளிக்கப்படவில்லை என்பதால், கடன்களைத் திருப்பிச் செலுத்துவதைத் தள்ளிவைத்து, கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்னும் கோரிக்கையை ஒன்றிய அரசின் கவனத்திற்கு தாம் கொண்டு சென்றுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்


எனவே, ஊரடங்கு, அறிவிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு ரூ.5 கோடி வரையில் நிலுவைகளைக் கொண்டுள்ள அளைத்துச் சிறு கடனாளர்களுக்கும் குறைந்த அளவு 2021-202 ஆண்டின் முதல் இரு காலாண்டுகளுக்கு கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்னும் கருத்தினை ஒன்றிய நிதி அமைச்சர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆகிய இருவரின் கவனத்திற்கும் கொண்டு செல்ல வேண்டுமென முதலமைச்சர்களைக் கேட்டுக் கொள்வதாக அக்கடிதத்தில் தெரிவித்து, இக்காலக்கட்டத்தில் நமது கூட்டு வலிமையை நாம் மீண்டும் வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும் என  தமிழ்நாடு முதலமைச்சர் முக. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Tags: mk stalin Vaccine chief minister rbi loan finance minister MSME reserve bank of India

தொடர்புடைய செய்திகள்

Tamil Nadu Coronavirus Case: 19,000 கீழ் குறைந்த கொரோனா தொற்று!

Tamil Nadu Coronavirus Case: 19,000 கீழ் குறைந்த கொரோனா தொற்று!

Sputnik V Vaccine : சென்னை வந்தது ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி!

Sputnik V Vaccine : சென்னை வந்தது ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி!

Chennai Weather Update: தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

Chennai Weather Update: தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

திமுக தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை

திமுக தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை

காஞ்சிபுரம் : கல் குவாரியில் மண்சரிவு : 2 வடமாநில ஊழியர்களின் உடல்களை தேடும் பணி தீவிரம்!

காஞ்சிபுரம் : கல் குவாரியில் மண்சரிவு : 2 வடமாநில ஊழியர்களின் உடல்களை தேடும் பணி தீவிரம்!

டாப் நியூஸ்

கோவேக்சினை விட கோவிஷீல்டு ‛செம்ம’ : ஆய்வில் தகவல்!

கோவேக்சினை விட கோவிஷீல்டு ‛செம்ம’ : ஆய்வில் தகவல்!

Twitter Trending | கலகலப்பும், கலாயுமாக மாறிய ட்விட்டர்.. களமிறங்கிய முதலை, தேவாங்கு!

Twitter Trending | கலகலப்பும், கலாயுமாக மாறிய ட்விட்டர்.. களமிறங்கிய முதலை, தேவாங்கு!

TN School Education : 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

TN School Education : 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

ரூ.1 கோடி மதிப்பில் தூர்வாரப்படும் ஏரி : கமலா ஹாரிஸ் பொறுப்பேற்ற ஆண்டைக் கொண்டாடும் பூர்வீக கிராமம்!

ரூ.1 கோடி மதிப்பில் தூர்வாரப்படும் ஏரி : கமலா ஹாரிஸ் பொறுப்பேற்ற ஆண்டைக் கொண்டாடும் பூர்வீக கிராமம்!