(Source: ECI/ABP News/ABP Majha)
ஆளுநரை சந்தித்தது ஏன்? - பாஜக அண்ணாமலை பேட்டி
பிரதமரின் பாதுகாப்பு குறைபாடுக்கு பஞ்சாப் அரசுதான் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும்.
பஞ்சாப்பில் பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து எங்கள் ஆதங்கத்தை ஆளுநரிடம் பதிவு செய்ததாகவும், தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வை என்பதை வலியுறுத்வோம் என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்டடோர் சந்தித்தனர்.
இந்த சந்திப்பு குறித்து அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர் பேசுகையில், “பஞ்சாப்பில் பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து எங்கள் ஆதங்கத்தை ஆளுநரிடம் பதிவு செய்தோம். பிரதமரின் பாதுகாப்பு குறைபாடுக்கு பஞ்சாப் அரசுதான் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு தேவை என்பதை நாளைய கூட்டத்தில் வானதி சீனிவாசன் வலியுறுத்துவார். நீட் தேர்வு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் கலந்து கொள்வார். நீட் தேர்வின் சாதகங்கள் குறித்து நாளைய கூட்டத்தில் எடுத்துரைக்கப்படும்” என்று கூறினார். TN All Party Meet:நீட் விலக்கு மசோதா குறித்து விவாதிக்க நாளை சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் - தமிழ்நாடு அரசு
நீட் விலக்கு தொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. Pongal Gift 2022:'சொன்னதும் வழங்கவில்லை.. வழங்கியதும் உருப்படி இல்லை' பொங்கல் தொகுப்பு விநியோகத்தை கண்டித்த ஓபிஎஸ்
இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6.1.2022 அன்று ‘நீட்’ தேர்வு தொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டுவது குறித்து, சட்டப்பேரவை விதி 110-ன்கீழ் அறிவித்தார்கள். இதுகுறித்து, சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி நாளை (8.1.2022) காலை 10.30 மணியளவில் தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பில் சி.விஜயபாஸ்கர் பங்கேற்கிறார். MK Stalin Assembly Speech: 'திமுகவினர் என்றாலும் நடவடிக்கை பாயும்.. இது கலைஞர் மீது ஆணை..' சட்டசபையை அதிர வைத்த ஸ்டாலின்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்