மேலும் அறிய

Toll Plaza : தமிழ்நாட்டில் 32 சுங்கச்சாவடிகளை மூட மத்திய அரசை வலியுறுத்துவோம்.. அமைச்சர் எ.வ.வேலு

தமிழ்நாட்டில் 16 சுங்கச்சாவடிகள் இருக்க வேண்டிய சூழலில், 48 சுங்கச்சாவடிகள் இருப்பதாகவும், மீதமுள்ள 32 சுங்கச்சாவடிகளை மூட மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த மாதம் 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சட்டசபையில் இன்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய துறைகளின் மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது, இன்று கவன ஈர்ப்பு தீர்மானத்தின்போது மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ-வுமான ஜவாஹிருல்லா சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானத்தை கொண்டு வந்து அவர் பேசும்போது, தமிழ்நாட்டில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 21 சுங்கச்சாவடிகளில் நேற்று கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகள் கந்துவட்டிக்காரர்கள் போல வசூல் செய்கிறார்கள். தமிழக மக்கள் மீது பொருளாதார தாக்குதல் நடத்தி வருகின்றனர். எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பொதுமக்கள் கட்டணமின்றி பயணம் செய்வதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.


Toll Plaza : தமிழ்நாட்டில் 32 சுங்கச்சாவடிகளை மூட மத்திய அரசை வலியுறுத்துவோம்.. அமைச்சர் எ.வ.வேலு

இதையடுத்து, அவருக்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, “ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலே ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. சென்னையை சுற்றியுள்ள பரனூர், நெமிலி, சென்ன சமுத்திரம், சூரப்பட்டு உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளை அகற்ற விரைவில் ஒன்றிய அமைச்சரை சந்திக்க உள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள சாலைகளின் அடிப்படையில் 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், 48 சுங்கச்சாவடிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள 32 சுங்கச்சாவடிகளை மூடுவது தொடர்பாக, ஒன்றிய அமைச்சரை சந்திக்கும்போது வலியுறுத்தப்படும்.” இவ்வாறு அவர் கூறினார்.Toll Plaza : தமிழ்நாட்டில் 32 சுங்கச்சாவடிகளை மூட மத்திய அரசை வலியுறுத்துவோம்.. அமைச்சர் எ.வ.வேலு

தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் பலவும் காலாவதியான பிறகும் தொடர்ந்து இயங்கி வருவதாகவும், சில சுங்கச்சாவடிகளில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்களை காட்டிலும் அதிகளவில் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதுமட்டுமின்றி, தீபாவளி, பொங்கல் போன்ற விழா காலங்களில் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும்போது சுங்கச்சாவடிகள் காரணமாகவே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதன் காரணமாகவே, சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று தொடர்ந்து பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளை மூடுவது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும் என்று கூறப்பட்டதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க : மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. நன்றி தெரிவித்த வேல்முருகன்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget