மேலும் அறிய

TMC Quits NDA: தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியது தமாகா; GK வாசன் கூறிய காரணம் என்ன தெரியுமா.?

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார். பேட்டியில் அவர் கூறியது என்ன.? பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார். கட்சி தொடங்கி 12 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் இலக்கை அடைய முடியவில்லை என கூறியுள்ள அவர், கடந்த சில தேர்தல்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என கூறி, கூட்டணியிலிருந்து வெளியேறி உள்ளார்.

தமாகா செயற்குழுக் கூட்டம்

சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம், கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தலைமையில் இன்று  நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்த அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர்களும், மாநில நிர்வாகிகளும், மாவட்ட தலைவர்களும் பங்கேற்றனர்.

“தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்“

இந்த கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த தமாகா  தலைவர் ஜி.கே. வாசன், தமிழ்நாட்டில் தற்போது தேர்தலுக்கு முன்ப ஒரு கூட்டணி, தேர்தலுக்கு பின்பு ஒரு கூட்டணி என்ற நிகழ்வுகள் நடைபெற்று வருவதாக சுட்டிக்காட்டினார். இத்தகைய சூழலில், கட்சி தொடங்கி 12 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் இலக்கை அடைய முடியவில்லை என்று கூறிய அவர், கடந்த சில தேர்தல்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை எனவும், உள்ளாட்சித் தேர்தலில் தனித்து செயல்பட நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

அதனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அவர் அறிவித்தார். மேலும், தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்த ஜி.கே. வாசன், என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறினாலும், மத்தியில் பாஜக - மாநிலத்தில் அதிமுகவுடன் தமாக நட்பு கட்சியாகவே செயல்படும் என தெரிவித்தார்.

“கட்சியை பலப்படுத்தும் பணி தொடங்கும்“

தொடர்ந்து பேசிய அவர், கூட்டணியில் கட்சியின் அரசியல் வளர்ச்சி குறைவதாக நிர்வாகிகள் கருதுவதாகவும், உள்ளாட்சித் தேர்தல் வரும் வரை, தங்கள் கட்சி தனித்தன்மையோடு செயல்பட்டு, மீண்டும் அடித்தளத்தை பலப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அந்த அடிப்படையிலேயே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நட்புடன் விலகுவதாகவும், 12 ஆண்டுகளாக கூட்டணியிலேயே பயணித்ததால், தங்கள் வலிமை குறைந்துள்ளதாக கருதுவதாகவும் அவர் கூறினார். அதனால், வரும் காலத்தில் கட்சியை பலப்படுதத தங்கள் பணிகள் தொடங்கும் என்றும், தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் வரை, தங்கள் கட்சியை பலப்படுத்த உள்ளதாக ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

தமாகா-வின் அரசியல் பயணம்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, கடந்த 2019-ம் ஆண்டு முதல் தொடர்ந்து பாஜக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. கடந்த நடாளுமன்ற தேர்தலில், அதிமுக-பாஜக கூட்டணி பிரிந்தபோது, தமாகா பாஜகவுடன் தொடர்ந்தது. அதன்பின்னர், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், அதிமுக தலைமையிலான பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியில் இடம்பெற்றது.

தமாகா-விற்கு மொத்தம் 5 தொகுதிகள் வழங்கப்பட்டன. அந்த தொகுதிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் தாமரை சின்னத்தில் போட்டியிட்டனர். ஆனால், அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தனர்.

அதன்பின் அதிமுகவில் ஏற்பட்ட பிளவு, அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறியது உள்ளிட்டவற்றால், தமாக யார் பக்கம் இருக்கிறது என்ற கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், இன்று தமாக செயற்குழு கூட்டத்தில், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
" பேனர் வைப்பதில் தகராறு " ரியல் எஸ்டேட் அதிபர் பட்டப் பகலில் வெட்டிப் கொலை
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
திரள்நிதி வாங்கி டீ கூட குடிச்சது இல்ல.. தறுதலை கூட்டமே.. கடுமையாக விமர்சித்த சீமான்!
திரள்நிதி வாங்கி டீ கூட குடிச்சது இல்ல.. தறுதலை கூட்டமே.. கடுமையாக விமர்சித்த சீமான்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Embed widget