மேலும் அறிய

கார்த்திகை தீபத் திருவிழா ஆலோசனைக் கூட்டம்; வெளியேற்றப்பட்ட செய்தியாளர்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விஐபிகள் பற்றி பேசுகிற அதிகாரிகள் செய்தியாளர்களை வெளியே அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் முக்கியமான விழாவாகும். கொரோனா தளர்வுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தீபத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கினார். அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் முருகேஷ்; கடந்த ஆண்டுகளில் தீபத்திருவிழாவின் மலைமீது ஏற்றப்படும் நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியின் போது அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் காட்சி அளிக்கும் அர்த்தநாரீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அப்போது வி.ஐ.பி.களும், வி.வி.ஐ.பி.களும் மட்டுமே கோவில் வளாகத்தில் இருப்பார்கள் என்று கூறினார்.

கார்த்திகை தீபத் திருவிழா ஆலோசனைக் கூட்டம்; வெளியேற்றப்பட்ட செய்தியாளர்கள்

அர்த்தநாரீஸ்வரர் காட்சி தரும் போது சாமானிய பக்தர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பக்தர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இடம் ஒதுக்கீடு ஆனால் ஆலோசனை கூட்டத்தின் போது வி.ஐ.பி.களுக்கு இடம் ஒதுக்கீடு செய்வது, அவர்களின் பாதுகாப்பு ஏற்பாடு, இருக்கைகள் வைப்பது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. வழக்கமான முன்னேற்பாடு பணிகளான கோவில் வளாகத்தில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, கிரிவலப்பாதையில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பேஸ் டிராக்கிங் மென்பொருள் பொருத்துவது, கிரிவலப்பாதையில் காண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பது, பக்தர்கள் கிரிவலம் செல்லும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள், தற்காலிக பேருந்து நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள், தீபத்தன்று பக்தர்களின் வசதிக்கு ஏற்ப பேருந்துகள் இயக்குவது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. தீபத் திருவிழாவின் முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் இவைகள் அனைத்தும் தற்போது வரக்கூடிய பௌர்ணமி நாள் அன்று அனைவரும் தீபத் திருவிழா ஒத்திகை போன்று நடத்தவேண்டும். 12 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 

கார்த்திகை தீபத் திருவிழா ஆலோசனைக் கூட்டம்; வெளியேற்றப்பட்ட செய்தியாளர்கள்

மேலும், 3 ஆயிரம் பேருந்துகள் 6 ஆயிரம் முறை சென்று வர போக்குவரத்து துறையின் மூலம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தற்காலிக பேருந்து நிலையங்களில் சேரும், சகதியும் இல்லாதவாறு ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்றும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் கிரிவலப்பாதையில் வி.ஐ.பி.கள் கிரிவலம் செல்லும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதனால் ஆலோசனை கூட்டத்தில் இருந்து செய்தியாளர்களை பாதியில் வெளியில் அனுப்பப்பட்டனர். இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
Fox Jallikattu: வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தினால் 7 ஆண்டுகள் சிறை - வனத்துறை எச்சரிக்கை
வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தினால் 7 ஆண்டுகள் சிறை - வனத்துறை எச்சரிக்கை
திமுக கபட நாடகம்... தோலுரிக்கும் சி.வி.சண்முகம் - விழுப்புரத்தில் பேசியது என்ன?
திமுக கபட நாடகம்... தோலுரிக்கும் சி.வி.சண்முகம் - விழுப்புரத்தில் பேசியது என்ன?
Embed widget