திருப்பூர் மக்களுக்கு அவசர அலர்ட்! ஜூலை 20 அன்று மின்சாரம் நிறுத்தப்படும் முக்கிய பகுதிகள் இதுதான்
Tiruppur power cut (20-07-2026): திருப்பூர் மாவட்டத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் (ஜூலை 20, 2026, திங்கட்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்
திருப்பூர் மாவட்டம்
ஒலப்பாளையம், பழையகோட்டை மற்றும் காடையூர் துணை மின் நிலையங்கள்
ஓலப்பாளையம், கண்ணபுரம், பா.பச்சாபாளையம், செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கேயம்பாளையம், முருகன்காட்டு வலசு, பழையகோட்டை, நத்தக்காடையூர், மருதுறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன் வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம், கண்ணம்மாபுரம், காடையூர், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூர், பசுவமூப்பன்வலசு, சடையபாளையம், சம்மந்தம்பாளையம், மேட்டுபாறை மற்றும் பொன்னங்காளி வலசு.
ஊத்துக்குளி துணை மின் நிலையம்
ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆர்.எஸ்., விஜிபுதூர், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்ப்பாளையம், பி.வி.ஆர்.பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியம்பாளையம், சேடர்பாளையம், எஸ்.பி.என். பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, காவிந்தம்பாளையம், ஆர்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம், மானூர்தொட்டியவலசு, வயக்கா ட்டுபுதூர், ஏ.கத்தாங்கன்னி.
செங்கப்பள்ளி துணை மின் நிலையம்
செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடாபாளையம், பள்ளபாளையம், நீலாக்கவுண்டம்பாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம்புதூர், வட்டாளபதி, செரங்காடு, ஆதியூர் பிரிவு, செங்கப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை.
இச்சிப்பட்டி துணை மின் நிலையம்
இச்சிப்பட்டி, சின்ன அய்யன் பெருமாகவுண்டம் பாளையம் பிரிவு, தேவராயன்பாளையம், கோம்பக்காடு, கோம்பக்காடுபுதூர், கள்ளப்பாளையம், கருகம்பாளையம், பெத்தாம்பூச்சிபாளையம், செந்தேவிபாளையம், குமாரபாளையம், கொத்து முட்டிபாளையம், கோடாங்கிபாளையம், சின்னகோடாங்கிபாளையம், சாமளாபுரம், சூரியா நகர் மற்றும் ராம்நகர் பகுதிகள்
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாக சமாளிக்க முடியும்
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.
Before You Go
"வேதனையில் இருக்கும் சிறுவனை இப்டியா இமிடேட் செய்வது" கொந்தளித்த TRB ராஜா
ட்ரெண்டிங் செய்திகள்






















