Tirupati Temple Assets: வட்டி மட்டுமே ரூ. 1800 கோடி: சேமிப்பு விவரங்களை வெளியிட்ட திருப்பதி தேவஸ்தானம் - புகாருக்கு பதிலடி
Tirupati Temple Assets: டெபாசிட் விவரங்கள் குறித்து திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்தில் நிர்வாக முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், டெபாசிட் விவரங்கள் குறித்து தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது. ஓராண்டில் டெபாசிட்கள் மூலம் ரூ.1,800 கோடி வட்டி கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்தில் முறைகேடு நடப்பதாக தெலுங்கு தேசம் கட்சி குற்றம் சாட்டியது. திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். திருப்பதி கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் தொகை, நன்கொடை வழங்கும் தொகை, தங்கம் ஆகியவை தேசியமயமாக்கப்பட்ட்ட வங்கிகளில் டெபாசிட் செய்து வருவதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022- நவம்பர் வரை ஏழுமலையான் பெயரில் வங்கிகளில் ரூ.15,939.68 லட்சம் டெபாசிட் செய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒராண்டில் ரூ.1,877.47 கோடி வட்டி கிடைத்ததால் ரூ.17.816 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-செப்டம்பர் மாதம் வங்கிகளில் தங்கம் 10,258.37 கிலோ அளவிற்கு இருப்பு வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டில் இது 11,225.66 கிலோவாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும், 2019-ம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு வங்கிகளில் ரூ.4791 கோடியே 6 லட்சம் பணமும் 3885 கிலோ 920 கிராம் தங்கமும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க..
Thoothukudi Firing: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - 21 மீது நடவடிக்கை: தமிழக அரசு