"இந்த எஸ்சி பசங்களே இப்படிதான் எப்ப பாரு 2 முட்டை சாப்பிடுறாங்க" - சத்துணவு அமைப்பாளர் அடாவடி பேச்சு
இந்த எஸ்சி பசங்களே இப்படிதான் எப்ப பாரு ரெண்டு முட்டை சாப்பிடுறாங்க சத்துணவு அமைப்பாளர் அடாவடி பேச்சு! ஏழாம் வகுப்பு பள்ளி மாணவன் ஆதங்க பேட்டி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பொம்மிக்குப்பம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பத்மினி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் சத்துணவு வாங்கியுள்ளார்.
அப்போது அந்த மாணவரை பார்த்து, “இந்த எஸ்சி பசங்களே இப்படித்தான் எப்ப பாரு ரெண்டு முட்டை கேக்குறாங்க” என அடாவடியாக பேசி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவன் தன்னுடைய மாமாவிடம் கூறியபோது, இதுகுறித்து அவருடைய மாமா கேள்வி எழுப்பியும் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என தகாத முறையில் பேசி உள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து அந்த பள்ளி மாணவர் செய்தியாளரிடம், தன்னை ஜாதி பெயரை சொல்லி திட்டுகிறார் மேலும் தகாத வார்த்தைகளால் என்னை பேசினார் என ஆதங்கமாக கூறினார்.
அது மட்டுமல்லாமல் சத்துணவு கூடத்தில் கேஸ் சிலிண்டரில்தான் சமையல் செய்ய வேண்டும் என பொருட்கள் அரசு கொடுக்கும். அதை மதிக்காமல் விறகு அடுப்பில் சத்துணவை செய்து மாணவர்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினால் தங்களுக்கு அரசியல் பலம் வாய்ந்த பல நபர்களை தெரியும் நிருபர்கள் ஆக இருந்தாலும் கூட என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என அடாவடியாக பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் இதுபோல் அரசியல் செல்வாக்கை வைத்து பணி செய்யும் சத்துணவு அமைப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.





















