மேலும் அறிய

பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஊராட்சி தலைவருக்கு அவமதிப்பு : துப்புரவு பணியாளர் நல ஆணையம் விசாரணை..!

திருவண்ணாமலை கல்லரைப்பாடி ஊராட்சி மன்ற பட்டியல் இனத்தை தலைவரை பணிசெய்ய விடாமல் தடுத்த ஊராட்சி செயலாளரிடம், சஃபாய் கர்மச்சாரி தேசிய ஆணைய தலைவர் எம். வெங்கடேசன் விசாரணை

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கல்லரைப்பாடி ஊராட்சியில் ஊராட்சி தலைவராக உள்ள ஏழுமலை என்பவரை ஊராட்சி செயலாளர் வேல்முருகன் என்பவர் அவரது பட்டியலினத்தவர் என்னும் ஜாதிய பாகுபாட்டைச் சொல்லி இழிவாக நடத்தியதாகவும், ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சாயத்து அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுப்பட்டார். அதன்  பெயரில்  எழுந்த புகாரின் அடிப்படையில், அப்போது  இருந்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியால்,  ஊராட்சி மன்றச் செயலாளர் வேல்முருகன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து தொலைக்காட்சி மற்றும் செய்திதாள்களில் வந்த செய்திகளின் அடிப்படையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தினர் ஆய்வு நடத்த கூறியதன் அடிப்படையில், இன்று கல்லரைப்பாடி கிராமத்தில் சஃபாய் கர்மச்சாரி, தேசிய ஆணைய தலைவர் எம். வெங்கடேசன் பாதிக்கப்பட்ட நபர் ஏழுமலை மற்றும் ஊராட்சியிடம் செயளாலர் வேல் முருகனிடமும் மற்றும் கிராம வார்டு உறுப்பினர்களிடமும் தனி தனியாக விசாரணை மேற்கொண்டார்.

பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஊராட்சி தலைவருக்கு அவமதிப்பு : துப்புரவு பணியாளர் நல ஆணையம் விசாரணை..!

இந்த விசாரணையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மற்றும் கூடுதல் ஆட்சியர் பிரதாப், உதவி இயக்குனர் ஊராட்சிகள் ஆகியோர் பங்கேற்றனர். இந்த விசாரணை சுமார் இரண்டு மணி நேரம் நடைப்பெற்றது. விசாரணை முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சஃபாய் கர்மச்சாரி, தேசிய ஆணைய தலைவர் எம். வெங்கடேசன் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றில் வந்த செய்திகளின் அடிப்படையில் தாம் இந்த விசாரனையை மேற்கொண்டுள்ளதாகவும், இந்த சம்பவம் குறித்து ஊராட்சி மன்றத்தலைவர்  மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் நேரிடையாக விசாரனை செய்துள்ளதாகவும்,மேலும் அதிகாரிகள் தொடந்து இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள், வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர் உட்பட பலரிடம் விசாரணை செய்து வருவதாகவும், தன்னிடம் உள்ள ஆதாரங்களை ஊராட்சி மன்றத்தலைவர் அளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையிலும் விசாரனை செய்யப்பட்டு வருவதாகவும், சம்மந்தப்பட்ட ஊராட்சி செயலாளர் தற்போது தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரின் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேல் நடவடிக்கை மற்றும் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்க வாய்ப்புள்ளதாகவும் வெங்கடேசன் கூறினார்.

பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஊராட்சி தலைவருக்கு அவமதிப்பு : துப்புரவு பணியாளர் நல ஆணையம் விசாரணை..!

ஊராட்சி செயலாளர் தலைவரை அவதூறாக பேசிய ஆடியோவினை கேட்டுள்ளோம், இதுமட்டுமின்றி பஞ்சாயத் ராஜ் சட்டப்படி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் என்பவர் தனிப்பட்ட சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். பஞ்சாயத்து அலுவலகத்தில் கட்சியின் வண்ணங்களை கொண்டு பஞ்சாயத்து அலுவலக்தில்  பெயர்களை எழுதக்கூடாது. இதற்கு மாவட்ட நிர்வாகம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் நான் தலையிட முடியாது என்றும் கூறினார். மேலும் இது குறித்து கிராம மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடையேயும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார் சஃபாய் கர்மச்சாரியின் தேசிய ஆணைய தலைவர் எம். வெங்கடேசன் கூறியபடி மாவட்ட நிர்வாகம் பஞ்சாயத்து அலுவலகத்தில் எழுதப்பட்டுள்ள கட்சி வர்ணங்களில் எழுதப்பட்ட பெயர்களை மாவட்ட நிர்வாகம்  மாற்றம் செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது .

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget