School leave: கனமழை எதிரொலி: திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 4 காரணமாக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாகவே தெரிவித்து இருந்தது. அதனைத்தொடர்ந்து, நவ. 11ம் தேதியான இன்று பல மாவட்டங்களுக்கு ரெட், மஞ்சள் அலெர்ட்டுகளும் விடுக்கப்பட்டது. தற்போது, சென்னை, பெரம்பலூர், தஞ்சாவூர், கடலூர், சேலம் உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், இராணிப்பேட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் செயல்படும் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது இந்நிலையில் நேற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சில தாலுக்கா பகுதியில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். தற்போது சேலம், இராமநாதபுரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு இருக்கின்றனர். சிவகங்கை, நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.புதுச்சேரி - காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை வழங்கி அம்மாநில முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இன்று கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன - மிக கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்' என வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புப் பணிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழு தயாராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியில் 9.20 சென்டிமீட்டர் மழை, செய்யார் பகுதியில் 19.30 , ஜமுனா மரத்தூர் 0.00, வந்தவாசி 25.20 , போளூர் 3.80, திருவண்ணாமலை 5.00, தண்டராம்பட்டு 5.80 , கலசப்பாக்கம் 0.00, சேத்துப்பட்டு 5.60, கீழ்பெண்ணாத்தூர் 14.20, வெண்பாக்கம் 18.0 செங்கம் 0.00 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. மேலும் தமிழக கடற்கரைப் பகுதிகள் மன்னார் வளைகுடா பகுதி மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் மணிக்கு காற்றானது 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் அடுத்த ஓரிரு தினங்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்