மேலும் அறிய

Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி

திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட  பாலம்  திட்டத்தை செயல்படுத்த கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - அன்புமணி.

திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவது வரவேற்கத்தக்கது, ரூ.700 கோடி ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று பா.ம.க.  தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை 13.30 கி.மீ. தொலைவுக்கு ரூ.2100 கோடியில் 4 வழி உயர்மட்டப் பாலம் அமைப்பதற்காக ஐதராபாத்தைச் சேர்ந்த கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்  நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து அரசு ஆய்வு செய்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் மகிழ்ச்சியளிக்கின்றன. மக்களின் வரிப்பணம் ரூ.700 கோடியை ஊழல் மூலம் சுரண்டும் இந்த ஒப்பந்தம் இரத்து செய்யப்படுவது வரவேற்கத்தக்கது ஆகும்.

திருவான்மியூருக்கும், உத்தண்டிக்கும் இடையே ரூ.2100 கோடியில் உயர்மட்டச் சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் கடந்த டிசம்பர் 24-ஆம் நாள் ஐதராபாத்தைச் சேர்ந்த கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நாளில் இருந்தே  ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும்,  இதன் பின்னணியில் நடந்த ஊழல் மற்றும் கூட்டுச் சதி குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறேன். அதற்கு காரணம் இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில்  ஊழல் நடந்திருப்பது அப்பட்டமாக தெரிவதுதான்.


நிராகரித்த திமுக அரசு


உயர்மட்ட பாலம் அமைக்க ரூ.2100 கோடி செலவாகும் என குறிப்பிட்டிருந்த நிலையில், அதில்  ரூ.700 கோடி குறைவாக ரூ.1400 கோடியில் அப்பணியை முடித்துத் தருவதாக  மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த திலிப் பில்ட்காப் என்ற நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி அளித்திருந்தது. ஆனால், அதிக தொகையை குறிப்பிட்டிருந்த கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்த அளிக்க வேண்டும் என்பதற்காக திலிப் பில்ட்காப் நிறுவனத்தின் ஒப்பந்தப் புள்ளியை எந்தக் காரணமும் கூறாமல் திமுக அரசு நிராகரித்து விட்டது. பின்னர் கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு  ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.

கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டதை எதிர்த்தும், தங்களின் ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்தும் தொடக்கத்தில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த திலிப் பில்ட்கான் நிறுவனம்  பின்னர் ஏனோ பின்வாங்கி விட்டது.

ரத்து செய்வதற்கான முயற்சி

திமுக ஆட்சியில் ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், புதியஆட்சியிலும் தடையின்றி பணிகள் நடைபெற்று வந்த நிலையில்தான்  ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தேன். அதன் பிறகாவது இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் பெருமளவில் ஊழல் நடந்திருப்பதை தெரிந்து கொண்டு அதை ரத்து செய்வதற்கான முயற்சிகளை அரசு தொடங்கியிருப்பது நீதி வெல்லும் என்பதைக் காட்டுகிறது.

வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரையிலான வெளிவட்ட சாலையை மதுரவாயல் பகுதியுடன் இணைப்பதற்காக 6 வழி உயர்மட்டப்பாலம் அமைக்கப்படவுள்ளது. இந்த பாலம் அமைக்க ஒரு கிலோ மீட்டருக்கு  ரூ.147  கோடி மட்டுமே செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதை விட அகலம் குறைந்த 4 வழி உயர்மட்டப்பாலத்திற்கு கிலோ மீட்டருக்கு ரூ.157.89 வழங்குவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

அனைவருமே தண்டிக்கப்பட வேண்டியவர்கள்

திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட  பாலத்திற்கு அதிகபட்சமாகவே  ரூ.1400 கோடி தான் செலவாகும் எனும் நிலையில், அதில் 50 விழுக்காடான  ரூ.700 கோடியை ஒரு தனியார் நிறுவனத்திற்கு கூடுதலாக வழங்கும் வகையில் ஒப்பந்தம் செய்வது மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். கடந்த ஆட்சியில் இதன் பின்னணியில் இருந்த அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருமே தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான்.

எனவே, எந்த தயக்கமும் இல்லாமல் திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட  பாலம்  திட்டத்தை செயல்படுத்த கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை உடனடியாக இரத்து செய்ய வேண்டும்.  இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் நடந்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து சிபிஐ  விசாரணைக்கு  தமிழக அரசு ஆணையிட வேண்டும்’’ என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.  

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(15-07-2026) எங்கெல்லாம் பவர் கட்? இதோ முழு லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(15-07-2026) எங்கெல்லாம் பவர் கட்? இதோ முழு லிஸ்ட்
ஆடி பிறப்பு: திருப்புவனம் சந்தையில் கால்நடை விற்பனை அமோகம்.. விவசாயிகள் ஆர்வம் ஏன்?
ஆடி பிறப்பு: திருப்புவனம் சந்தையில் கால்நடை விற்பனை அமோகம்.. விவசாயிகள் ஆர்வம் ஏன்?
EPS:
EPS: "விஜய்தான் களவாணி.." தவெக ஆட்சியை தாறுமாறாக விமர்சித்த இபிஎஸ்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
India Condemn Hormuz Attack: ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
Senthil Balaji: விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
600 கி.மீட்டர் மைலேஜ்... இளைஞர்களின் நாடித்துடிப்பு Yamaha FZ Blue Flex - இந்த பைக் எவ்ளோ விலை?
600 கி.மீட்டர் மைலேஜ்... இளைஞர்களின் நாடித்துடிப்பு Yamaha FZ Blue Flex - இந்த பைக் எவ்ளோ விலை?
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 vs புல்லட் 350: மைலேஜ், விலை,டிசைன்- எது பெஸ்ட்? முழு ஒப்பீடு
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 vs புல்லட் 350: மைலேஜ், விலை,டிசைன்- எது பெஸ்ட்? முழு ஒப்பீடு
Innova Hycross Facelift: அடி சக்க.! இன்னோவா ஹைக்ராஸை ஃப்ளெக்ஸ்-ஃப்யூயல் அவதாரத்தில் இறக்கும் டோயோட்டா; சிறப்பம்சம் என்ன.?
அடி சக்க.! இன்னோவா ஹைக்ராஸை ஃப்ளெக்ஸ்-ஃப்யூயல் அவதாரத்தில் இறக்கும் டோயோட்டா; சிறப்பம்சம் என்ன.?
Embed widget