மேலும் அறிய

நாங்கள் மதவாத கட்சி இல்லை...! திருமாவுக்கு நயினார் நாகேந்திரன் பதில்!

பெயரிலேயே மதவாதம் வைத்துள்ள கட்சியுடன் தான் திருமாவளவன் கூட்டணி வைத்துள்ளார் - நயினார் நாகேந்திரன்

விழுப்புரம் : பெயரிலேயே மதவாதம் வைத்துள்ள கட்சியுடன் தான் திருமாவளவன் கூட்டணி வைத்துள்ளார், மத்திய அரசு கல்விதுறைக்கு நிதி ஒதுக்கீடு செய்தால் இந்தியை சேர்த்து விடுவார்களா என  பாஜகவை சார்ந்த நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 
 
தமிழகம் முழுவதும் பாஜகவினர் உறுப்பினர் சேர்க்கையானது தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்து அதற்கான உறுப்பினர் அட்டையை வழங்கினார். அதனை தொடர்ந்து மதவாத சாதிய கட்சிகள் விசிக மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கவில்லை  என்ற திருமாவளவனின் கருத்துக்கு பதிலளித்து பேசிய பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன்... 
 
யார் மத வாத சக்தி, பெயரிலேயே மதவாதம் வைத்துள்ள கட்சியுடன் தான் திருமாவளவன் கூட்டணி வைத்துள்ளதாகவும், திருநெல்வேலியில் போட்டியிட்ட போது ஜாதியின் பெயராலும், மத வாதத்தின் பெயராலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டவர்கள் தான் அவர்கள். மத வாத கட்சி என்பது நாங்கள் இல்லை என தெரிவித்தார். மேலும் மத்திய அரசு கல்விதுறைக்கு நிதி ஒதுக்கீடு செய்தால் இந்தியை சேர்த்துவிடுவார்களா என கேள்வி எழுப்பி உள்ளார். 
 
நேற்றைய முன்தினம் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது....

பாஜகவும் பாமகவிற்கு தான் நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை

போதை என்பது அமைதியாக நடைபெறுகிற பேரழிவு சாதாரண மக்கள் சாராயக்கடைகளை மூடினாலே நல்லது நடக்கும் என பொதுமக்கள் நம்புவதாகவும், தேர்தல் அரசியல் மற்றும் கூட்டணி அரசியலோடு மது ஒழிப்பு மாநாட்டினை முடிச்சி போட வேண்டாம் என்றும் இது எல்லோரும் இருக்கிற மது ஒழிப்பு மாநாடு என கூறினார். கூட்டணியில் இருந்தாலும் நல்ல பிரச்சனைகள் இருந்தால் எதிர்த்து போராடுவோம் அதன்படி அதிமுக மது ஒழிப்பு மாநாட்டிற்கு வந்து மேடையில் பேசலாம். பாஜகவும் பாமகவும் விற்கு தான் நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை அவர்கள் மதவாத சாதியவாத கட்சி என்பதால் அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை எப்போதும் அவர்களுடன் இணைய மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தார். 

மக்கள் நலன் சார்ந்து செயல்பட வேண்டும் 

மக்கள் நலன் சார்ந்து செயல்பட வேண்டியுள்ளதால் அனைவரும் இணைந்து மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற வேண்டுமென வலியுறுத்தினார். திமுகவிற்கும், அதிமுகவிற்கும் மதுவை ஒழிக்க வேண்டும் என்ற கருத்துள்ள போது படிப்படியாக ஏன் தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டு வரஇயலாது என்றும் இந்தி திணிப்பு, நீட் எதிர்ப்பு போன்றவைகளில் தமிழகம் முதன்மையானவையாக இருக்கும் போது தமிழகம் ஏன் மது ஒழிப்பில் முதன்மையானவையாக இருக்க கூடாது என கேள்வி எழுப்பினார். 

ஒரு கட்சியின் கோரிக்கையாக பார்க்க வேண்டாம்

மது ஒழிப்பிற்கு அறை கூவல் விடுப்பது மதுவை ஒழிக்க மட்டுமே இது 2026 வது ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தி இல்லை அரசியல் வேறு மது ஒழிப்பு என்பது வேறு என்று திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். மதுக்கடைகளை வைத்து கொண்டு அதன் மூலம் வருமானத்தை கொண்டு அரசு ஆட்சி நடத்துவது என்று கூறுவது ஏற்புடையதல்ல மக்களுடைய கோரிக்கையை தான் முன் வைப்பதாகவும் அது ஒரு கட்சியின் கோரிக்கையாக பார்க்க வேண்டாம் எல்லோரும் கை கோர்த்தால் தான் முடிவு எட்டப்படும் கள்ளச்சாராயம் புழக்கம் இன்னும் இருக்கிறது பள்ளி வரை போதை பொருள் பழக்கம் உள்ளது பெண்களுக்கெதிரான குற்றங்கள் அனைத்தும் போதை பொருட்களில் அடிமையானவர்களால் நடைபெற்றுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
IPL RCB vs KKR: மிரட்டும் வானிலை! RCB vs KKR மேட்ச்சில் மழை பெய்தாலும் கவலை வேண்டாம் - என்ன நடக்கும்?
IPL RCB vs KKR: மிரட்டும் வானிலை! RCB vs KKR மேட்ச்சில் மழை பெய்தாலும் கவலை வேண்டாம் - என்ன நடக்கும்?
உடலுறவு கொள்ள தினமும் ரூ.5000; டிசைன் டிசைனா டார்ச்சர் செய்யும் மனைவி! நீதிமன்றத்துக்கு வந்த கணவர்!
உடலுறவு கொள்ள தினமும் ரூ.5000; டிசைன் டிசைனா டார்ச்சர் செய்யும் மனைவி! நீதிமன்றத்துக்கு வந்த கணவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?Ilayaraja : இளையராஜாவிற்கு பாரத ரத்னா? சிம்பொனி-யால் உயரிய இடம்! ரசிகர்கள் உற்சாகம்! | Bharat Ratna

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
IPL RCB vs KKR: மிரட்டும் வானிலை! RCB vs KKR மேட்ச்சில் மழை பெய்தாலும் கவலை வேண்டாம் - என்ன நடக்கும்?
IPL RCB vs KKR: மிரட்டும் வானிலை! RCB vs KKR மேட்ச்சில் மழை பெய்தாலும் கவலை வேண்டாம் - என்ன நடக்கும்?
உடலுறவு கொள்ள தினமும் ரூ.5000; டிசைன் டிசைனா டார்ச்சர் செய்யும் மனைவி! நீதிமன்றத்துக்கு வந்த கணவர்!
உடலுறவு கொள்ள தினமும் ரூ.5000; டிசைன் டிசைனா டார்ச்சர் செய்யும் மனைவி! நீதிமன்றத்துக்கு வந்த கணவர்!
Anganwadi Job: எழுத்து தேர்வே கிடையாது- நிரந்தர அரசு வேலை- 7783 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Anganwadi Job: எழுத்து தேர்வே கிடையாது- நிரந்தர அரசு வேலை- 7783 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Italy Teacher Suspended: என்னமா.. இப்படி பண்ணிட்டியே மா.? ஆபாச மாடலாகவும் பணியாற்றிய பள்ளி ஆசிரியை.. எங்கு தெரியுமா.?
என்னமா.. இப்படி பண்ணிட்டியே மா.? ஆபாச மாடலாகவும் பணியாற்றிய பள்ளி ஆசிரியை.. எங்கு தெரியுமா.?
Annamalai Slams: இந்த ஊழல் இந்தியாவையே உலுக்கும்.. தமிழக அரசியல் சரித்திரத்தை மாற்றும்.. அண்ணாமலை கூறியது என்ன?
இந்த ஊழல் இந்தியாவையே உலுக்கும்.. தமிழக அரசியல் சரித்திரத்தை மாற்றும்.. அண்ணாமலை கூறியது என்ன?
ADMK Survey :  ”எடப்பாடியின் ரகசிய சர்வே – ஜெயிக்கிறவங்களுக்குதான் சீட்” பின்னணியில் Ex. உளவுத்துறை..!
ADMK Survey : ”எடப்பாடியின் ரகசிய சர்வே – ஜெயிக்கிறவங்களுக்குதான் சீட்” பின்னணியில் Ex. உளவுத்துறை..!
Embed widget