மேலும் அறிய

CM Stalin: திமுக ஆட்சி தமிழாட்சி; தமிழுக்கு ஆற்றிய அரும்பணிகள் என்ன?- முதல்வர் ஸ்டாலின் பட்டியல்

மதவாதத்தாலும் சாதியவாதத்தாலும் மனிதர்களுக்குள் பிளவு ஏற்படும்போது, ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற திருவள்ளுவரின் ஒற்றை வரி மனிதர்களை ஒன்றாக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதவாதத்தாலும் சாதியவாதத்தாலும் மனிதர்களுக்குள் பிளவு ஏற்படும்போது, ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற திருவள்ளுவரின் ஒற்றை வரி மனிதர்களை ஒன்றாக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான சென்னை இலக்கியத் திருவிழா இன்று (ஜனவரி 6) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பிரம்மாண்டமாகத் தொடங்கியது. விழாவைத் தொடங்கிவைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

’’மாநிலத்தின் முதலைச்சர் என்ற பெருமையால் மட்டுமல்ல, தமிழன் என்ற உரிமையால் இந்த விழாவில் கலந்துகொள்வதில் பெருமைப்படுகிறேன்.

* ஈராயிரம்‌ ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு கொண்ட தமிழருடைய நிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர்‌ சூட்டியது!

* நூற்றாண்டுக்‌ கனவான செம்மொழித்‌ தகுதியை தமிழுக்கு பெற்றுத்‌ தந்தது!

* 'மெட்ராஸ்‌' என்ற பெயரை 'சென்னை' என்று மாற்றியது !

* ஸ்ரீ‌, ஸ்ரீமதி என்ற சொல்லுக்கு பதிலாக திரு, திருமதி என்ற சொல்லை சட்டபூர்வமாக ஆக்கியது !

* தலைநகரில்‌ வள்ளுவர்‌ கோட்டமும்‌, கடல்‌ நகரில்‌ 133 அடியில்‌ வள்ளுவர்‌ சிலையும்‌ அமைத்தது !

* திரும்பிய பக்கம்‌ எல்லாம்‌ திருக்குறளைத்‌ தீட்டியது!

* தமிழ்‌ வாழ்க என எழுத வைத்தது!

* சிலம்பின்‌ பெருமையை எடுத்துக்‌ காட்டக்கூடிய வகையிலே பூம்புகார்‌ கோட்டம்‌ அமைத்தது !

* தமிழில்‌ வழிபடக்கூடிய உரிமையை பெற்றுத்‌ தந்தது!

*  ஆட்சிமொழியாய்‌ தமிழை முழுமையாக்கியது !

* தமிழ்நாடு பாடநூல்‌ நிறுவனம்‌ மூலம்‌ அனைத்துப்‌ பாடங்களையும்‌ தமிழில்‌ மொழிபெயர்த்து 1000க்கும்‌ மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டது!

*  தமிழை கணினி மொழி ஆக்கியது!

* தமிழ்‌ பயிற்று மொழிக்கான அடித்தளம்‌ அமைத்துக்‌ கொடுத்தது. இன்று பள்ளிக்‌ கல்வி முதல்‌ கல்லூரிக்‌ கல்வி வரை தமிழில்‌ படிக்கலாம்‌!

* உலகத்‌ தமிழ்‌ மாநாட்டை நடத்தியது!

* உலகத்‌ தமிழ்ச்‌ செம்மொழி மாநாட்டை நடத்தியது !

* திராவிடப்‌ பல்கலைக்‌கழகத்திற்கு நிதி வழங்கியது!

* தமிழ்நெட்‌ இணைய மாநாட்டை 1999 இல்‌ நடத்தியது !

* அனைத்து விழாக்களிலும்‌ நீராரும்‌ கடலுடுத்த..' என்ற தமிழ்த்தாய்‌ வாழ்த்துப்‌ பாடலை பாட வேண்டும்‌ என்று உத்தரவிட்டது !

* சென்னை கடற்கரையில்‌ அவ்வையார்‌, கண்ணகி, கம்பர்‌, வீரமாமுனிவர்‌, ஜி.யு.போப்‌, வ.உ.சி., பாரதியார்‌, பாரதிதாசன்‌ சிலைகளை அமைத்தது !

இப்படி சொல்லிக்‌ கொண்டே போகலாம்‌. அதனால்‌ தான்‌ திமுக ஆட்சியை தமிழாட்சி என்று நாமெல்லாம்‌ சொல்லிக்‌ கொண்டிருக்கிறோம்‌. அந்த வரிசையில்‌ கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு முன்னெடுப்புகளை முத்தமிழ்‌ வளர்ச்சிக்காகச்‌ நம்முடைய ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

* தமிழறிஞர்‌ நூல்கள்‌ நாட்டுடமை
* எழுத்தாளர்கள்‌ பிறந்தநாளில்‌ கூட்டங்கள்‌
* குறைந்த விலையில்‌ சங்க இலக்கிய நூல்கள்‌ வெளியீடு
* திராவிடக்‌ களஞ்சியம்‌ உருவாக்கம்‌
* இதழியலாளர்களுக்கு கலைஞர்‌ எழுதுகோல்‌ விருது
* அமெரிக்காவில்‌ உள்ள ஹூஸ்டன்‌ பல்கலைக்‌ கழகத்தில்‌ தமிழ்‌ இருக்கை அமைப்பதற்காக 2 கோடியே 50 லட்சம்‌ ரூபாய்‌ நிதி உதவி
* ஜெர்மனியில்‌ உள்ள கோலாம்‌ பல்கலைக்கழக தமிழ்த்‌ துறை தொடர்ந்து இயங்க ஒரு கோடியே 25 லட்சம்‌ ரூபாய்‌ நிதி உதவி
* டெல்லி ஐவஹர்லால்‌ பலகலைக்கழகத்தில்‌ தமிழ்‌ இலக்கியவியல்‌ தனித்‌ துறையாக தொடங்க 5 கோடி ரூபாய்‌ நிதி உதவி
* நூலகங்களுக்கு சிற்றிதழ்கள்‌
* இலக்கியமாமணி விருதுகள்‌
* உயரிய விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம்‌
* திசை தோறும்‌ திராவிடம்‌
* குறள்‌ பரிசு
* முத்தமிழறிஞர்‌ மொழிபெயர்ப்புத்‌ திட்டம்‌
* தீராக்காதல்‌ திருக்குறள்‌ என தமிழாட்சி செய்து வருகிறோம்.

மொழியை பற்றால் மட்டும் வளர்த்துவிட முடியாது. அறிவியல், சிந்தனைகளால் மட்டுமே வளர்க்க முடியும். தமிழ் வளர்ச்சிக்காக திமுக தொடர்ந்து பணியாற்றி வருகிறது. 
 
மதவாதத்தாலும் சாதியவாதத்தாலும் மனிதர்களுக்குள் பிளவு ஏற்படும்போது, ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற திருவள்ளுவரின் ஒற்றை வரி மனிதர்களை ஒன்றாக்கும்’’.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: கடலுக்குள் மாட்டிக்கொண்ட 6 மீனவர்கள்; ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!
Fengal Cyclone LIVE: கடலுக்குள் மாட்டிக்கொண்ட 6 மீனவர்கள்; ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: கடலுக்குள் மாட்டிக்கொண்ட 6 மீனவர்கள்; ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!
Fengal Cyclone LIVE: கடலுக்குள் மாட்டிக்கொண்ட 6 மீனவர்கள்; ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Red Alert: நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; எங்கெல்லாம் அதி கனமழைக்கு வாய்ப்பு? வானிலை சொல்வது என்ன?
Red Alert: நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; எங்கெல்லாம் அதி கனமழைக்கு வாய்ப்பு? வானிலை சொல்வது என்ன?
Chennai Red Alert: நாளை சென்னைக்கு மிக கனமழை வாய்ப்பு; நவ.30 ரெட் அலர்ட்: வானிலை அப்டேட் இதுதான்!
Chennai Red Alert: நாளை சென்னைக்கு மிக கனமழை வாய்ப்பு; நவ.30 ரெட் அலர்ட்: வானிலை அப்டேட் இதுதான்!
Chennai Rain Alert: ஃபெங்கல் புயல்; நவ.29, 30-ல் அடித்து வெளுக்கப்போகும் கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை!
Chennai Rain Alert: ஃபெங்கல் புயல்; நவ.29, 30-ல் அடித்து வெளுக்கப்போகும் கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை!
Embed widget