மேலும் அறிய

Minister Senthil Balaji: தவறு செய்திருந்தால் ஒப்புக் கொள்ள வேண்டியது தானே? ஏன் பச்சை பொய்? - அமைச்சர் செந்தில் பாலாஜி..!

ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணி வெற்றி பெறுமா என்பது கேள்வியல்ல, எவ்வளவு வாக்கு வித்தியாசம் என்பது தான் கேள்வி என செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணி வெற்றி பெறுமா என்பது கேள்வியல்ல, எவ்வளவு வாக்கு வித்தியாசம் என்பது தான் கேள்வி என செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது,  "ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியைப் பொறுத்தவரையில் திமுக கூட்டணி வெற்றி பெறுமா என்றோ, வெற்றி வாய்ப்பு எந்த அளவிற்கு உள்ளது என்ற கேள்வி பொறுத்தமானதாக இருக்காது. எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்பது தான் பொறுத்தமான கேள்வியாக இருக்கும்" என அவர் கூறியுள்ளார்.

மேற்கொண்டு பேசிய அவர், "திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப்போகிறது என்பதைப் பாருங்கள். குறிப்பாக கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 80 விழுக்காடுக்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சி மகத்தான வெற்றியைப் பெற நாங்கள் தேர்தல் களத்தில் நின்று பணியாற்றுவோம் எனவும் அவர் கூறியுள்ளார். 

பச்சைப் பொய் அண்ணாமலை 

இண்டிகோ விமானம் எமர்ஜென்சி கதவு விவகாரம் குறித்து ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் உண்மையை ஒப்புக்கொண்ட நிலையில், அண்ணாமலை மாறி மாறி பேசி பச்சைப் பொய் பேசி வருகிறார். தவறு செய்திருந்தால் ஒத்துக் கொள்ள வேண்டியது தானே. ஏன் பொய் கூற வேண்டும். மேலும், ரஃபேல் வாட்ச் பில் தன்னிடம் இருந்தால் இப்போதே வெளியிடலாம் அல்லவா? ஏன் ஏப்ரல் மாதம் வரை கால அவகாசத்தினை நீட்டிக்க வேண்டும்? அதற்கான பில்லை தயார் செய்வதற்கு தானே. மேலும், பாஜக ஒன்றியத்தை ஆளுகிறது என்பதற்காக தமிழ்நாட்டில் பாஜக பெரிய கட்சி என்று அர்த்தம் கிடையாது. தமிழ்நாடு பாஜகவில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை எவ்வளவு? பொறுப்பாளர்கள் எவ்வளவு? கட்சியின் நிலை என்ன என்பதை  அண்ணாமலை வெளியிட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.  

தலைப்பு செய்திகள்

மூவர்ணத்தில் ஜொலித்த வங்கக்கடல்! 20 நாட்டிகல் மைல் தூரம் கடலுக்குள் சென்று போலீசார் நடத்திய பிரம்மாண்ட பேரணி!
மூவர்ணத்தில் ஜொலித்த வங்கக்கடல்! 20 நாட்டிகல் மைல் தூரம் கடலுக்குள் சென்று போலீசார் நடத்திய பிரம்மாண்ட பேரணி!
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Embed widget