மேலும் அறிய

கே.டி.ராகவனின் வீடியோவை கொடுத்திருந்தால் கட்சி சார்பில் நடவடிக்கை எடுத்திருப்போம்- அண்ணாமலை

கே.டி.ராகவன் விவகாரத்தில் வெளியிட்ட அறிக்கைக்கும், யூடியூபரின் வீடியோவிலும் எந்த வித்தியாசமும், மாற்று கருத்தும் கிடையாது - தமிழக பாஜக அண்ணாமலை பேட்டி.

தமிழ்நாடு பாஜக தலைவராக பொறுப்பேற்ற முதன் முறையாக புதுச்சேரிக்கு வந்த அண்ணாமலை புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமார் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பேசினார்.  பின்னர் செய்திகளை சந்தித்த அண்ணாமலை, அனைத்து மாநில பாஜகவுக்கு உத்வேகம் தரக்கூடிய வகையில் புதுச்சேரி பாஜக மாறியிருப்பதாக தெரிவித்தார்.

"புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் அற்புதமான, வித்தியாசமான ஆட்சியை புதுச்சேரி மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன்பிருந்த முதல்வரால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை என்றால் மத்திய அரசின் மீதும், ஆளுநர் மீதும் பழிபோடுவதை பார்த்துக் கொண்டிருந்தோம். இப்போது ஆரோக்கியமான முறையில் ஒரு ஆட்சி நடக்கிறது. இதற்கு பாஜக கூட்டணியில் முக்கிய காரணமாகும். இதே உத்வேகத்தில் தமிழகத்திலும் பாஜகவை வளர்க்க அரும்பாடு படுவோம்.

கே.டி.ராகவனின் வீடியோவை கொடுத்திருந்தால் கட்சி சார்பில் நடவடிக்கை எடுத்திருப்போம்- அண்ணாமலை

புதுச்சேரியில் பாஜக ஆட்சிக்கு வராது, மக்கள் வாக்களிக்க மாட்டார்கள், தாமரை மலராது என்று கூறியதை இங்குள்ள தலைவர்கள் முறியடித்துள்ளனர். பாஜகவை நம்பியும், அதன் தலைவர்களை நம்பியும் வாக்களித்து, அதனுடைய பலனை இங்குள்ள மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழக பாஜகவுக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்திருக்கிறார்கள். உழைப்புக்கு மக்கள் வெகுமதி கொடுப்பார்கள் என்று புதுச்சேரி பாஜகவை பார்த்து கற்றுக் கொண்டுள்ளோம். வருகின்ற காலம் தமிழகத்தில் கூட அடி மேல் அடி எடுத்து வைத்து நிச்சயமாக ஆட்சியைப் பிடிப்போம்.

கே.டி.ராகவனின் வீடியோவை கொடுத்திருந்தால் கட்சி சார்பில் நடவடிக்கை எடுத்திருப்போம்- அண்ணாமலை

"தமிழகத்தில் தற்போது கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளி, கல்லூரிகளைத் திறக்கிறார்கள். இதில் எந்த தவறும் இல்லை. ஏனென்றால்,  அசாதாரணமான சூழ்நிலையில் குழந்தைகள் 2 ஆண்டுகள் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துள்ளோம். இதனால் எல்லா குழந்தைகளுக்கும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. ஆகவே பள்ளி திறப்பை பாஜக வரவேற்கிறது.

விநாயகர் சதுர்த்திக்கு தனி மனிதனாக விநாயகரை வழிபடலாம், சிலையை கரைத்துக் கொள்ளலாம். ஆனால், கூட்டமாக செல்ல அனுமதியில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்தாண்டும் இதே மாதிரிதான் இருந்தது. விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்களிடம் விட்டு விடுங்கள். அவர்கள் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன்  விழாவை நடத்திக் காட்டுவார்கள். டாஸ்மாக்கை திறந்து அதிகமான மக்களை விடுகிறோம். இந்த நிலையில் எதற்காக விநாயகர் சதுர்த்தி பேரணியைத் தடை செய்ய வேண்டும். அரசு கட்டுப்பாடுகளை விதிக்கலாம். ஆனால், நடத்தவே கூடாது என்று சொல்வதை பாஜக ஏற்றுக் கொள்ளாது," என‌ அண்ணாமலை கூறினார்.

கே.டி.ராகவனின் வீடியோவை கொடுத்திருந்தால் கட்சி சார்பில் நடவடிக்கை எடுத்திருப்போம்- அண்ணாமலை

தொடர்ந்து பேசிய அவர், "கட்சி தலைவரின் பெயரில் ஒரு வீடியோ வெளி வந்துள்ளது. அதற்கு ஒரு குழு போட்டுள்ளோம். அந்த குழு விசாரித்து நடவடிக்கை எடுக்கும். அந்த யூடியூபர் எதற்கு என்னை சந்தித்தார். அப்போது நான் என்ன பேசினேன் என்று அறிக்கையில் சொன்னதற்கும், அவர் வெளியிட்ட வீடியோவுக்கும் எந்தவிதமான வித்தியாசமும் கிடையாது. அவர் முறைப்படி அந்த வீடியோ டேப்பை என்னிடம் கொடுத்திருந்தால் கட்சி சார்பாக நடவடிக்கை எடுத்திருப்போம். அவர் அந்த வீடியோவை கொடுக்க ஆர்வமில்லாமல் வெளியிட்டுள்ளார். நான் வெளியிட்ட அறிக்கைக்கும், யூடியூபர் வீடியோவிலும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்காது. மேலும், பத்திரிக்கையாளர்களின் முதல் வீடியோவில் கட்சியை சார்ந்தும், நிர்வாகிகளை சார்ந்தும், பெண் நிர்வாகிகள் சார்ந்தும் சில விஷயங்கள் பேசியுள்ளார். அது சம்பந்தமாக குழு அமைத்து முழு அதிகாரம் கொடுத்துள்ளோம். அக்குழு நடவடிக்கை எடுக்கும்," என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

நாளைய பிரதமரே.. கொம்பு சீவும் அமைச்சர்கள்... கடிவாளம் போடுவாரா முதலமைச்சர் விஜய்?
நாளைய பிரதமரே.. கொம்பு சீவும் அமைச்சர்கள்... கடிவாளம் போடுவாரா முதலமைச்சர் விஜய்?
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...
கோ-ஆப்டெக்ஸ் மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும்; வாக்குறுதி அளித்து விட்டு ஏமாற்றக் கூடாது - அன்புமணி வலியுறுத்தல்
கோ-ஆப்டெக்ஸ் மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும்; வாக்குறுதி அளித்து விட்டு ஏமாற்றக் கூடாது - அன்புமணி வலியுறுத்தல்
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
Embed widget