Deepavali Ticket Booking: ரெடியா இருங்க மக்களே.. தீபாவளிக்கான டிக்கெட் முன்பதிவு தொடக்கம்.. எப்போ தெரியுமா? முழு விவரம்..
தீபாவளி பண்டிக்கைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12-ஆம் தேதி தொடங்குகிறது.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு வரும் 12 ஆம் தேதி டிக்கெட் முன்பதிவு தொடங்க உள்ளது.
தீபாவளி பண்டிகை என்றாலே மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவார்கள். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். தீபாவளி, பொங்கள் பண்டிகையின் போது லட்சக்கணக்கான மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். பெரும்பாலான மக்கள் குடும்பத்துடன் செல்ல ரயில்களில் முன்பதிவு செய்வார்கள். ஆண்டுதோறும் தீபாவளி பண்டிக்கைகாக ரயில்களில் மட்டும் 3 முதல் 4 லட்சம் மக்கள் பயணம் மேற்கொள்வார்கள்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. ஞாயிற்றுக்கிழமை தீபாவளி என்பதால் வெள்ளிகிழமையே மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதற்கான முன்பதிவு எப்போது என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் வருகிற ஜூலை 12 ஆம் தேதி முதல் தீபாவளி பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 நாட்களுக்கு மக்கள் வசதிக்காக தீபாவளி பண்டிக்கைக்காக ரயில்களில் முன்பதிவு தொடங்குகிறது என ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 12 ஆம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 9 ஆம் தேதியும், ஜூலை 13 ஆம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 10 ஆம் தேதிக்கும், 14 ஆம் தேதி முன்பதிவு செய்பவர்கள் 11 ஆம் தேதிக்கும், 15 ஆம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 12 ஆம் தேதிக்கும், 16 ஆம் தேதி முன்பதிவு செய்பவர்கள் 13 ஆம் தேதிக்கும் பயணம் செய்ய முடியும். அதே போல் ஜூலை 17 மற்றும் 18 ஆம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 14 மற்றும் 15 ஆம் தேதிக்கு பயணம் செய்ய முடியும். இதற்கான முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள மக்களுக்கு ரயில்வே துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.