மேலும் அறிய

Government Jobs: இனி அரசு பணியிடங்களில் முதல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.. அதிரடி உத்தரவு..

அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை என வருவாய் துறை சார்பில் அரசாணை வெளியீடு

மனித வள மேலாண்மைத்துறையின் 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை தொடர்பான உரையின்போது, வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசுப் பணியிடங்களில் பின்வரும் இனத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சட்டமன்ற பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன் பேரில் வெளியிடப்பட்ட அரசாணையில்,

  • ”கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள்,  முதல் தலைமுறைப் பட்டதாரிகள் மற்றும் தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
  •  2010-2011-ஆம் கல்வியாண்டு முதல் இதுவரை பட்டதாரிகளே இல்லாத குடும்பத்திலிருந்து ஒற்றைச்சாளர முறையில் தொழிற்கல்வி பயில தேர்வுபெற்ற மாணவர்களுக்கு சாதிப் பாகுபாடின்றியும், வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும், அம்மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் (Tultion fee) முழுவதையும் சில நிபந்தனைகளுடன் அரசே ஏற்றுக் கொள்ளும்.
  • வேலை வாய்ப்பகங்கள் வழியாக திரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகள், கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள் மற்றும் தமிழக அரகப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதற்காக இவ்வரசாணை வெளியிடப்பட்டது. மேலும், மேற்குறிப்பிட்ட அரசாணையின் அடிப்படையில், முன்னுரிமை பெற்றுள்ள பிரிவினராக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துகொள்வதற்கும். முன்னுரிமை முறை பின்பற்றப்படும் பணியாளார் தெரிவுகளுக்கு விண்ணப்பிக்கும் பொருட்டும். வேலைவாய்ப்பில் முன்னுரிமை சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் முதல் தலைமுறை பட்டதாரி என்பதற்கான சான்றிதழ் வழங்கிடும் வகையில் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தேவையான ஆணைகள் / அறிவுறுத்தல்களை வழங்குமாறு மனிதவள மேலாண்மைத்துறை கேட்டுக் கொண்டது.
  • கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிர்வாக ஆணையரின் கடிதத்தில், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் குறித்த அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் அரசினால் பரிந்துரைக்கப்பட்ட குறிப்புரையின்படி அரசாணை பிறப்பிக்குமாறு கோரியுள்ளார்.
  • மனித வள மேலாண்மைத்துறை மற்றும் உயர்கல்வித்துறையின் ஆய்வுரைகளையும், கூடுதல் தலைமைச் செயலர்/ வருவாய் நிர்வாக ஆணையரின் குறிப்புரையையும் அரசு நன்கு கவனமுடன் பரிசீலித்து அதனை ஏற்று அரசாணை (நிலை) எண்.122. மனித வள மேலாண்மைத்துறை, நாள் 02.11.2021-இன்படி வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்குவதற்காக முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை இணைப்பில் கண்டவாறு அரசு ஆணையிடுகிறது.
  • தக்க நடவடிக்கை மேற்கொண்டு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தக்க அறிவுரைகளை வழங்குமாறும் மற்றும் வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்குவதற்காக முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான புதிய இணைய தொகுப்பு ( Module) உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.  
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Neeya Naana: மோசமான சூழலுக்குள் செல்கிறார்களா இளைஞர்கள்? - விவாதத்தை கிளப்பிய நீயா, நானா நிகழ்ச்சி
மோசமான சூழலுக்குள் செல்கிறார்களா இளைஞர்கள்? - விவாதத்தை கிளப்பிய நீயா, நானா நிகழ்ச்சி
Breaking News LIVE: தமிழ்நாட்டில் கோடை மழை 55% குறைவாக பெய்துள்ளது - வானிலை மையம்
தமிழ்நாட்டில் கோடை மழை 55% குறைவாக பெய்துள்ளது - வானிலை மையம்
CM MK Stalin: அன்பின் திருவுரு.. தன்னலம் கருதா சேவை.. அன்னையர் தினத்துக்கும், செவிலியர்களுக்கும் முதல்வர் வாழ்த்து
அன்பின் திருவுரு.. தன்னலம் கருதா சேவை.. அன்னையர் தினத்துக்கும், செவிலியர்களுக்கும் முதல்வர் வாழ்த்து
Veera Dheera Sooran:வீர தீர சூரன் படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!
Veera Dheera Sooran:வீர தீர சூரன் படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Premalatha Vijayakanth : ’’கேப்டன் உயிரோடு இருந்தால்..’’பத்ம விருதுடன் பிரேமலதா..உருக்கமான பேட்டிRahul Gandhi attacks BJP : BJP-க்கு புது விளக்கம்!  ராகுல் காந்தி நெத்தியடி! பரபரக்கும் ஆந்திராSelvaperunthagai on Annamalai : ”கச்சத்தீவு விவகாரம்.. வாய் திறங்க அ.மலை?” செல்வப்பெருந்தகை ஆவேசம்Ma Subramanian on NEET : நீட் தேர்வு குளறுபடி!மாசு புது விளக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Neeya Naana: மோசமான சூழலுக்குள் செல்கிறார்களா இளைஞர்கள்? - விவாதத்தை கிளப்பிய நீயா, நானா நிகழ்ச்சி
மோசமான சூழலுக்குள் செல்கிறார்களா இளைஞர்கள்? - விவாதத்தை கிளப்பிய நீயா, நானா நிகழ்ச்சி
Breaking News LIVE: தமிழ்நாட்டில் கோடை மழை 55% குறைவாக பெய்துள்ளது - வானிலை மையம்
தமிழ்நாட்டில் கோடை மழை 55% குறைவாக பெய்துள்ளது - வானிலை மையம்
CM MK Stalin: அன்பின் திருவுரு.. தன்னலம் கருதா சேவை.. அன்னையர் தினத்துக்கும், செவிலியர்களுக்கும் முதல்வர் வாழ்த்து
அன்பின் திருவுரு.. தன்னலம் கருதா சேவை.. அன்னையர் தினத்துக்கும், செவிலியர்களுக்கும் முதல்வர் வாழ்த்து
Veera Dheera Sooran:வீர தீர சூரன் படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!
Veera Dheera Sooran:வீர தீர சூரன் படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!
Election Movie: பா.ரஞ்சித் மட்டும் இல்லைன்னா அவ்வளவுதான்.. பட விழாவில் நெகிழ்ந்து பேசிய இயக்குநர் தமிழ்!
பா.ரஞ்சித் மட்டும் இல்லைன்னா அவ்வளவுதான்.. பட விழாவில் நெகிழ்ந்து பேசிய இயக்குநர் தமிழ்!
UGC : யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு; எப்போது வரை? விண்ணப்பிப்பது எப்படி?
யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு; எப்போது வரை? விண்ணப்பிப்பது எப்படி?
TVK Vijay: அம்மாவை எந்நாளும் போற்றி வணங்குவோம்.. அன்னையர் தின வாழ்த்து தெரிவித்த விஜய்!
அம்மாவை எந்நாளும் போற்றி வணங்குவோம்.. அன்னையர் தின வாழ்த்து தெரிவித்த விஜய்!
BCCI On New Toss Rule: இனி கிரிக்கெட்டில் டாஸ் போடும் முறை இல்லை.. புதிய விதியை கொண்டு வரும் பிசிசிஐ.. ஏன் தெரியுமா?
இனி கிரிக்கெட்டில் டாஸ் போடும் முறை இல்லை.. புதிய விதியை கொண்டு வரும் பிசிசிஐ.. ஏன் தெரியுமா?
Embed widget