மேலும் அறிய
Advertisement
Government Jobs: இனி அரசு பணியிடங்களில் முதல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.. அதிரடி உத்தரவு..
அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை என வருவாய் துறை சார்பில் அரசாணை வெளியீடு
மனித வள மேலாண்மைத்துறையின் 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை தொடர்பான உரையின்போது, வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசுப் பணியிடங்களில் பின்வரும் இனத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சட்டமன்ற பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன் பேரில் வெளியிடப்பட்ட அரசாணையில்,
- ”கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறைப் பட்டதாரிகள் மற்றும் தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
- 2010-2011-ஆம் கல்வியாண்டு முதல் இதுவரை பட்டதாரிகளே இல்லாத குடும்பத்திலிருந்து ஒற்றைச்சாளர முறையில் தொழிற்கல்வி பயில தேர்வுபெற்ற மாணவர்களுக்கு சாதிப் பாகுபாடின்றியும், வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும், அம்மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் (Tultion fee) முழுவதையும் சில நிபந்தனைகளுடன் அரசே ஏற்றுக் கொள்ளும்.
- வேலை வாய்ப்பகங்கள் வழியாக திரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகள், கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள் மற்றும் தமிழக அரகப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதற்காக இவ்வரசாணை வெளியிடப்பட்டது. மேலும், மேற்குறிப்பிட்ட அரசாணையின் அடிப்படையில், முன்னுரிமை பெற்றுள்ள பிரிவினராக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துகொள்வதற்கும். முன்னுரிமை முறை பின்பற்றப்படும் பணியாளார் தெரிவுகளுக்கு விண்ணப்பிக்கும் பொருட்டும். வேலைவாய்ப்பில் முன்னுரிமை சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் முதல் தலைமுறை பட்டதாரி என்பதற்கான சான்றிதழ் வழங்கிடும் வகையில் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தேவையான ஆணைகள் / அறிவுறுத்தல்களை வழங்குமாறு மனிதவள மேலாண்மைத்துறை கேட்டுக் கொண்டது.
- கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிர்வாக ஆணையரின் கடிதத்தில், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் குறித்த அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் அரசினால் பரிந்துரைக்கப்பட்ட குறிப்புரையின்படி அரசாணை பிறப்பிக்குமாறு கோரியுள்ளார்.
- மனித வள மேலாண்மைத்துறை மற்றும் உயர்கல்வித்துறையின் ஆய்வுரைகளையும், கூடுதல் தலைமைச் செயலர்/ வருவாய் நிர்வாக ஆணையரின் குறிப்புரையையும் அரசு நன்கு கவனமுடன் பரிசீலித்து அதனை ஏற்று அரசாணை (நிலை) எண்.122. மனித வள மேலாண்மைத்துறை, நாள் 02.11.2021-இன்படி வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்குவதற்காக முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை இணைப்பில் கண்டவாறு அரசு ஆணையிடுகிறது.
- தக்க நடவடிக்கை மேற்கொண்டு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தக்க அறிவுரைகளை வழங்குமாறும் மற்றும் வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்குவதற்காக முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான புதிய இணைய தொகுப்பு ( Module) உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion