CM Stalin: புயல் ஆய்வின்போது, முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்கப்பட்ட கேள்விகளும்-பதில்களும்...
மாண்டஸ் புயல் கரையை கடந்தபின் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலினிடம், செய்தியாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்தார்.
புயல் பாதிப்பு பணிகளில் முழுமையாக தங்களை ஈடுபடுத்தி கொண்டிருக்கக்கூடிய, இன்னமும் அந்த பணிகளை செய்து கொண்டிருக்கக் கூடிய- நம்முடைய அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள், ஊழியர்கள், குறிப்பாக நம்முடைய துப்புரவுப் பணியாளர்கள் என அத்தனை பேருக்கும் மீண்டும் ஒருமுறை உங்கள் சார்பில் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆய்வின் போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த பதில்களை பார்ப்போம்.
கேள்வி: பாதிப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில் மத்திய அரசின் உதவி கேட்கப்படுமா?
முதலமைச்சர் பதில்: தேவைப்பட்டால் கேட்போம்.
கேள்வி: மீனவர்கள் தரப்பிலும், பொதுமக்கள் தரப்பிலும் ஏதாவது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டால்?
முதலமைச்சர் பதில்: பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணத் தொகை கேட்டிருக்கிறார்கள். கணக்கெடுப்பு முழுமையாக எடுத்த பிறகு,
கேள்வி: விசைப்படகுகள் மட்டும் கணக்கு எடுத்திருக்கிறார்கள். கூப்பர் படகுகள் கணக்கெடுக்கவில்லை என்று காலையில் குற்றச்சாட்டுவந்திருக்கிறது. முதலமைச்சர் பதில்: இல்லை இல்லை. அதெல்லாம் எடுக்கப்பட்டிருக்கிறது. அது தவறான குற்றச்சாட்டு..
கேள்வி: வேறு மாவட்டங்களுக்கு ஆய்வு.
முதலமைச்சர் பதில்: ஆங்காங்கு அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஆட்சி தலைவர்கள் இருக்கிறார்கள். குறிப்பு வருகிறது. தேவைப்பட்டால், அமைச்சர்களோ அல்லது நானோ போகக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயம் போவோம்.
கேள்வி: இதனால் சுமார் எவ்வளவு தொகை நஷ்டம் ஏற்பட்டிருக்கும்?
முதலமைச்சர் பதில்: அந்த கணக்கெடுப்பு வரவில்லை, முழுமையாக வந்த பின் சொல்கிறேன். ஏனென்றால், இன்று ஒன்று சொல்லிவிட்டு, நேற்று இப்படி சொன்னீர்களே. நாளை இப்படி சொல்கிறீர்களே என்று நீங்கள் சொல்லக்கூடாது.
கேள்வி: நிவாரணம் கொடுக்கும் போது, மக்களை சந்தித்திருப்பீர்கள். மக்கள் என்ன சொல்கிறார்கள்?
முதலமைச்சர் பதில்: மக்கள் திருப்தியாக இருக்கிறார்கள். திருப்தியாக இருப்பது மட்டுமன்றி ஒத்துழைப்பும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், அரசு முறையாக உரிய வகையில் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது.
தமிழக அரசு எடுத்திருக்க கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாகத்தான். அதேபோல, அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பு, செயல்பாடு காரணமாக மக்கள் முழுமையாக பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். பெரிய அளவிலே குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவிற்கு எந்தச் சேதங்களும் இல்லை. மரங்கள் விழுந்திருப்பதைக்கூட உடனடியாக போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அது அப்புறப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்தப் பணியை மாநகராட்சி ஊழியர்கள் மிகச் சிறப்பான முறையில் செய்திருக்கிறார்கள். இரவென்றும் பாராமல். பகலென்றும் பாராமல் நம்முடைய அமைச்சர் பெருமக்கள் ஈடுபடுத்திக் கொண்டார்கள்.
தமிழக அரசு எடுத்திருக்க கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாகத்தான், அதேபோல, அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பு, செயல்பாடு காரணமாக மக்கள் முழுமையாக பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். பெரிய அளவிலே குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவிற்கு எந்தச் சேதங்களும் இல்லை. மரங்கள் விழுந்திருப்பதைக்கூட உடனடியாக போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அது அப்புறப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்தப் பணியை மாநகராட்சி ஊழியர்கள் மிகச் சிறப்பான முறையில் செய்திருக்கிறார்கள். இரவென்றும் பாராமல். பகலென்றும் பாராமல் நம்முடைய அமைச்சர் பெருமக்கள் குறிப்பாக, மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கக்கூடிய நேரு அவர்களும் மற்றும் பல்வேறு அமைச்சர்களும், சேகர்பாபு மா.சுப்பிரமணியன் அவர்களும் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் முழுமையாக தங்களை இதில் ஈடுபடுத்திக் கொண்டார்கள்.