மேலும் அறிய

TN Rain Alert: வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மழை இருக்குமா? இன்றைய வானிலை நிலவரம் இதோ..

தென் கிழக்கு வங்க கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் கிழக்கு வங்க கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது. 

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 5.30 மணி அளவில் அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது இன்று மாலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன் பின்னர் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் கிழக்கு மத்திய வங்க கடல் மற்றும் அந்தமான் கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் நாளை (மே 10 ஆம் தேதி) சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது. இது மே 12ஆம் தேதி காலை வரை வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகரக்கூடும். அதன்பிறகு, இது படிப்படியாக மீண்டு, வடக்கு-வடகிழக்கு திசையில் வங்கதேசம்-மியான்மர் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த சூறாவளி புயல் வங்கதேசம்-மியான்மர் கடற்கரையை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு மழை இருக்காது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தனங்களாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் தற்போது உருவாக இருக்கும் புயல் காரணமாக கூடுதல் மழை பொழிவு இருக்காது. மேலும் வட தமிழக கடலோரப்பகுதிகளின் மேல்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,

09.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

10.05.2023 முதல் 12.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

தமிழ்நாட்டில் மழை பொழிவு: 

தமிழ்நாட்டில் கோடை மழை மார்ச் 1 முதல்  நேற்று காலை வரை வழக்கத்தை விட கூடுதலாக 114 சதவிகிதம் அளவிற்கு பெய்துள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 1 முதல்  மே 7ம் தேதி காலை வரை, வழக்கமாக 77.5 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பொழியும். ஆனால், நடப்பாண்டில் ஆண்டில் அதே காலகட்டத்தில் 165.7 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பெய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
Vijay Sethupathi :
Vijay Sethupathi : "இது என் படத்தோட ப்ரோமோஷன்..அத பத்தி ஏன் பேசனும்?" சூடான விஜய் சேதுபதி
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு  விளக்கம்
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
மதுரை மக்களே உஷார்.. நாளை (17-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் விவரம் இதோ
மதுரை மக்களே உஷார்.. நாளை (17-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் விவரம் இதோ
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
Embed widget