TN Rain Alert: 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - எத்தனை நாட்களுக்கு? மழை நிலவரம் இதோ!
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை:
இன்று (10.12.2023) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
11.12.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
12.12.2023 முதல் 14.12.2023 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15.12.2023 மற்றும் 16.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
நாலுமுக்கு (திருநெல்வேலி) 11, அழகரை எஸ்டேட் (நீலகிரி) 10, ஊத்து (திருநெல்வேலி), மாஞ்சோலை (திருநெல்வேலி), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி) தலா 9, காக்காச்சி (திருநெல்வேலி), பர்லியார் (நீலகிரி), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி) தலா 8, சேரன்மகாதேவி (திருநெல்வேலி), குன்னூர் (நீலகிரி) தலா 7, குன்னூர் PTO (நீலகிரி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), கோத்தகிரி (நீலகிரி) தலா 6, அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) 5, ஆதார் எஸ்டேட் (நீலகிரி), கடம்பூர் (தூத்துக்குடி), கோடநாடு (நீலகிரி), பாபநாசம் (திருநெல்வேலி), பவானிசாகர் (ஈரோடு) தலா 4, கோடிவேரி (ஈரோடு), கருப்பாநதி அணை (தென்காசி), ஆயிக்குடி (தென்காசி), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), பேரையூர் (மதுரை), சிவகிரி (தென்காசி) தலா 3, சத்தியமங்கலம் (ஈரோடு), திருநெல்வேலி (திருநெல்வேலி), ராஜபாளையம் (விருதுநகர்), விளாத்திகுளம் (தூத்துக்குடி), களக்காடு (திருநெல்வேலி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), பாம்பன் (ராமநாதபுரம்), பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்), பாளையம்கோட்டை (திருநெல்வேலி), நாகுடி (புதுக்கோட்டை), சேர்வலாறு அணை (திருநெல்வேலி), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), குண்டாறு அணை (தென்காசி) தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.