மேலும் அறிய

TN Rain Alert: இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய மழை நிலவரம் இதோ..

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

29.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின்  மலை பகுதிகள்,  நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

30.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

01.10.2023 முதல் 05.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

கட்டப்பாக்கம் KVK ARG  (காஞ்சிபுரம்),  சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) தலா 5, வால்பாறை PTO (கோயம்புத்தூர்), இந்துஸ்தான் பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு), சோழிங்கநல்லூர் (சென்னை), கொடிவேரி (ஈரோடு), விஐடி சென்னை AWS (செங்கல்பட்டு) தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

தமிழக கடலோரப்பகுதிகள்:

29.09.2023 மற்றும் 30.09.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

02.10.2023:தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

29.09.2023:தெற்கு வங்கக்கடல் பகுதிகள்,  மத்தியகிழக்கு, வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும்  வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

30.09.2023: தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய  மத்திய-வடக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும்  வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

01.10.2023:வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 
இலங்கை கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய  மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும்  வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

02.10.2023: வடமேற்கு வங்கக்கடல், இலங்கை கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும்

இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 03.10.2023: வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு-மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

அரபிக்கடல் பகுதிகள்:  

29.09.2023 மற்றும் 30.09.2023: கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கு; ஆதாரமும் இருக்கு - அடித்து சொல்லும் ஐஐடி காமகோடி 
கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கு; ஆதாரமும் இருக்கு - அடித்து சொல்லும் ஐஐடி காமகோடி 
இந்த தண்டனை போதாது; மாநில அரசு நினைப்பது வேறு: பெண் மருத்துவர் கொலை வழக்கில் பொங்கிய மம்தா!
இந்த தண்டனை போதாது; மாநில அரசு நினைப்பது வேறு: பெண் மருத்துவர் கொலை வழக்கில் பொங்கிய மம்தா!
UGC draft: சர்ச்சையைக் கிளப்பிய யுஜிசி வரைவறிக்கை: சாட்டையைச் சுழற்றிய முதல்வர் ஸ்டாலின்!
UGC draft: சர்ச்சையைக் கிளப்பிய யுஜிசி வரைவறிக்கை: சாட்டையைச் சுழற்றிய முதல்வர் ஸ்டாலின்!
நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வழக்கு; குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள்!
நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வழக்கு; குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள்!
Embed widget