மேலும் அறிய
Advertisement
TN Rain Alert: மழைக்கு ரெடியா மக்களே.. இன்று 14 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
14 மாவட்டங்களில் கனமழை:
இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
23.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
24.09.2023 முதல் 26.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
27.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
28.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): சுருளக்கோடு (கன்னியாகுமரி) 11, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 10, வேடசந்தூர் (திண்டுக்கல்), புத்தன் அணை (கன்னியாகுமரி), கல்லிக்குடி (மதுரை) தலா 9, ஒகேனக்கல் (தர்மபுரி), பாலக்கோடு (தர்மபுரி), புகையிலை நிலையம் (VDR) (திண்டுக்கல்) தலா 7, சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி), ஆண்டிபட்டி (மதுரை) தலா 6, சின்கோனா (கோயம்புத்தூர்), திண்டுக்கல், முக்கடல் அணை (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), அரவக்குறிச்சி (கரூர்), பேரையூர் (மதுரை), எருமப்பட்டி (நாமக்கல்), மேட்டூர் (சேலம்), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) தலா 5, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), சிவலோகம் (கன்னியாகுமரி), பஞ்சப்பட்டி (கரூர்), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), உசிலம்பட்டி (மதுரை), அரிமளம் (புதுக்கோட்டை), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), நாலுமுக்கு (திருநெல்வேலி), ஆலங்காயம் (திருப்பத்தூர்), திருப்பத்தூர் (திருப்பத்தூர்), மூலனூர் (திருப்பூர்) தலா 4, முகலிவாக்கம் (சென்னை), சோழிங்கநல்லூர் (சென்னை), மாரண்டஹள்ளி (தர்மபுரி), பென்னாகரம் (தர்மபுரி), திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), பாலமோர் (கன்னியாகுமரி), சிற்றாறு (கன்னியாகுமரி), கன்னிமார் (கன்னியாகுமரி), மயிலம்பட்டி (கரூர்), பாலவிடுதி (கரூர்), கிருஷ்ணகிரி, குப்பணம்பட்டி (மதுரை), வாடிப்பட்டி (மதுரை), எமரால்டு (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), காக்கச்சி (திருநெல்வேலி), மாஞ்சோலை (திருநெல்வேலி), வாணியம்பாடி (திருப்பத்தூர்) தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion