மேலும் அறிய

Senthil Balaji Case: அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்கு  தடை விதிக்க மறுப்பு - ட்விஸ்ட் வைத்த சென்னை உயர்நீதிமன்றம்..

செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்கு  இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்கு  இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரையான அதிமுக ஆட்சியின்போது செந்தில் பாலாஜி போக்குவரத்துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துறையில் பணியாளர்களை பணியமர்த்த, அவர்களிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மோசடி செய்யப்பட்டதாக கூறி அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு அமலாக்கத்துறை தரப்பில் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகாத நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் தேதி நள்ளிரவில் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பின் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டு நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டு வருகிறது. மேலும் 8 மாத காலம் இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்ந்து வந்த நிலையில் கடந்த மாதம் அவர் பதவியை ராஜினாமா செய்தார். 

இந்நிலையில் மாநில போலீசார் தொடர்ந்துள்ள மோசடி வழக்குகளின் விசாரணை முடியும் வரை அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை  நிறுத்தி வைக்க செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது செந்தில் பாலாஜி மனுவுக்கு ஏப்ரல் 25 க்குள் பதிலளிக்கும்படி அமலாக்க துறைக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு உத்தரவு பிறபித்துள்ளனர்.

அமலாக்க துறை வழக்கு ஆரம்ப நிலையில் உள்ளதால் எந்த நிவாரணமும் வழங்க முடியாது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அப்போது, மோசடி வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் முன் அமலாக்க துறை வழக்கு விசாரணையை துவங்க முடியாது என  செந்தில் பாலாஜி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும், அமலாக்க துறை வழக்கை விசாரணைக்கு அனுமதிக்கும் பட்சத்தில் மோசடி வழக்கில் விடுவிக்கப்பட்டால் பாதிப்பு ஏற்படும் எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MI vs SRH LIVE Score: சொதப்பிய டாப் ஆர்டர்; சிக்கலில் மும்பை; கெத்து காட்டும் SRH பவுலிங்!
MI vs SRH LIVE Score: சொதப்பிய டாப் ஆர்டர்; சிக்கலில் மும்பை; கெத்து காட்டும் SRH பவுலிங்!
Raayan: ஜூன் மாதம் ராயன் ரிலீஸ்; இன்னும் மூன்று தினத்தில் முதல் பாடல் -  தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்!
Raayan: ஜூன் மாதம் ராயன் ரிலீஸ்; இன்னும் மூன்று தினத்தில் முதல் பாடல் - தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்!
Exclusive: “சி.ஏ. படித்து ஆடிட்டர் ஆவேன்”  - சாதிய கொடுமைக்கு ஆளான மாணவர் சின்னதுரை பிரத்யேக பேட்டி
“சி.ஏ. படித்து ஆடிட்டர் ஆவேன்” - சாதிய கொடுமைக்கு ஆளான மாணவர் சின்னதுரை பிரத்யேக பேட்டி
TN 12th Revaluation 2024: பிளஸ் 2 மதிப்பெண்‌ மறுகூட்டல்‌, விடைத்தாள்‌ நகலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
பிளஸ் 2 மதிப்பெண்‌ மறுகூட்டல்‌, விடைத்தாள்‌ நகலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Nanguneri Student Achievement | வெட்டிப்போட்ட சாதிவெறிசாதித்து காட்டிய சின்னதுரை! ChinnaduraiDurai Vaiko Press meet | ’’அப்பா இல்லனா…’’புகழ்ந்து தள்ளிய மகன்வைகோ REACTIONTTF Vasan ON Vijay Tv Pugazh Shalini issue | ”என் காதலியை இப்படிபண்ணலாமா புகழ்?”கொந்தளிக்கும் TTFVaiko Pressmeet | ”திமுக மாதிரி நாங்களும் பெரிய ஆளாகுவோம்” வைகோ நம்பிக்கை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MI vs SRH LIVE Score: சொதப்பிய டாப் ஆர்டர்; சிக்கலில் மும்பை; கெத்து காட்டும் SRH பவுலிங்!
MI vs SRH LIVE Score: சொதப்பிய டாப் ஆர்டர்; சிக்கலில் மும்பை; கெத்து காட்டும் SRH பவுலிங்!
Raayan: ஜூன் மாதம் ராயன் ரிலீஸ்; இன்னும் மூன்று தினத்தில் முதல் பாடல் -  தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்!
Raayan: ஜூன் மாதம் ராயன் ரிலீஸ்; இன்னும் மூன்று தினத்தில் முதல் பாடல் - தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்!
Exclusive: “சி.ஏ. படித்து ஆடிட்டர் ஆவேன்”  - சாதிய கொடுமைக்கு ஆளான மாணவர் சின்னதுரை பிரத்யேக பேட்டி
“சி.ஏ. படித்து ஆடிட்டர் ஆவேன்” - சாதிய கொடுமைக்கு ஆளான மாணவர் சின்னதுரை பிரத்யேக பேட்டி
TN 12th Revaluation 2024: பிளஸ் 2 மதிப்பெண்‌ மறுகூட்டல்‌, விடைத்தாள்‌ நகலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
பிளஸ் 2 மதிப்பெண்‌ மறுகூட்டல்‌, விடைத்தாள்‌ நகலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Rottweiler Dog: ராட்வெய்லர் நாய் வகைகள் ஆபத்தானவையா? மத்திய அரசு தடை விதித்த பிறகும் விற்கப்படுவது ஏன்?
ராட்வெய்லர் நாய் வகைகள் ஆபத்தானவையா? மத்திய அரசு தடை விதித்த பிறகும் விற்கப்படுவது ஏன்?
TN 12th Result 2024: 600க்கு 596 மார்க், 4 பாடங்களில் நூற்றுக்கு நூறு - கரூரில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பலர் வாழ்த்து
600க்கு 596 மார்க், 4 பாடங்களில் நூற்றுக்கு நூறு - கரூரில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பலர் வாழ்த்து
TN 12th Result 2024: தூத்துக்குடி மாவட்ட +2 தேர்வு முடிவுகள்; கடந்தாண்டு 5 வது இடம் தற்போது எத்தனையாவது இடம்?
தூத்துக்குடி மாவட்ட +2 தேர்வு முடிவுகள்; கடந்தாண்டு 5 வது இடம் தற்போது எத்தனையாவது இடம்?
"மாணவர்களின் கனவுக்கு துரோகம்" நீட் தேர்வுத்தாள் கசிவா? கொதித்தெழுந்த ராகுல் காந்தி!
Embed widget