மேலும் அறிய
’சாதி ஆணவக்கொலை ஆனது இந்த கண்ணகி எரித்ததாக இருக்கட்டும்’- கவனிக்கப்பட்ட நீதிபதியின் கருத்து
"தமிழ் மண்ணில் இப்படி ஒரு சம்பவம் இனி நடக்கூடாது , மேலும் மதுரையை கண்ணகி எரித்தை போல், சாதி ஆணவக்கொலை ஆனது இந்த கண்ணகி எரித்ததாக இருக்கட்டும்"
![’சாதி ஆணவக்கொலை ஆனது இந்த கண்ணகி எரித்ததாக இருக்கட்டும்’- கவனிக்கப்பட்ட நீதிபதியின் கருத்து The judge's opinion in the Cuddalore Kannaki-Murugesan honor killing case has received attention ’சாதி ஆணவக்கொலை ஆனது இந்த கண்ணகி எரித்ததாக இருக்கட்டும்’- கவனிக்கப்பட்ட நீதிபதியின் கருத்து](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/24/adfa465db3eefbbc567696e22690bcbf_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கண்ணகி - முருகேசன் தம்பதி
கடலூர் விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியில் வசிக்கும் தலித் சமுகத்தை சேர்ந்த சாமிகண்ணு என்பவரின் மகன் முருகேசன் பொறியாளர் பட்டம் பெற்றவராவார். இவர் அதே பகுதியில் வசித்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த துரைசாமி மகள் கண்ணகி (22) என்பவரை காதலித்து வந்தார். இதனையடுத்து இருவரும் கடந்த 5-5-2003 அன்று கடலூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டனர். எனினும் அவரவர் வீட்டில் தனித் தனியாக வசித்து வந்தனர்.
![’சாதி ஆணவக்கொலை ஆனது இந்த கண்ணகி எரித்ததாக இருக்கட்டும்’- கவனிக்கப்பட்ட நீதிபதியின் கருத்து](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/24/5ec8e6f90cc2343b3d4e0a171851332f_original.jpg)
இந்த நிலையில் , முருகேசன், கண்ணகியை விழுப்புரம் மாவட்டம், மூங்கில்துறைப்பட்டிலுள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு அவர் , ஸ்ரீமுஷ்ணம் வண்ணாங்குடிகாட்டிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். கண்ணகியை காணாமல் தேடிய அவரது உறவினர்களுக்கு, காதல் விவகாரம் தெரிய வந்தது. எனவே , முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி மூலமாக 2003 ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி முருகேசனையும் , மூங்கில்துறைப்பட்டிலிருந்து கண்ணகியையும் அழைத்து வந்தனர் . பின்னர் முருகேசன், கண்ணகி ஆகியோரை அருகிலுள்ள மயானத்துக்கு அழைத்துச் சென்று இருவருக்கும் மூக்கு, காது வழியாக விஷத்தை செலுத்தி அவர்களை கொலை செய்து , சடலங்களை தனித்தனியாக எரித்துள்ளனர் .
இந்த சம்பவத்தில், அப்போதைய விருத்தாசலம் காவல் நிலைய ஆய்வாளர் செல்லமுத்து, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேரை வழக்கில் குற்றவாளிகளாக சேர்த்தது. இந்த வழக்கு கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ப.தனபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது 2017 செப்டம்பர் 11ஆம் தேதி வரை தினமும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்பேரில் இந்த விசாரணை நடைபெற்றது. இதற்கான தீர்ப்பு இன்று கடலூர் எஸ்சி/எஸ்டி சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தமராசா கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டிக்கு தூக்கு தண்டனையும் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட 13 பேருக்கும் ஆயுள் தண்டனை அளித்து உத்தரவிட்டார்.
![’சாதி ஆணவக்கொலை ஆனது இந்த கண்ணகி எரித்ததாக இருக்கட்டும்’- கவனிக்கப்பட்ட நீதிபதியின் கருத்து](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/24/18f1e74e6b51a5cdd72f582dddfb9770_original.jpg)
இந்தியாவையே உலுக்கிய இந்த வழக்கில் நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் கவனம் பெற்றதாக அமைந்துள்ளது,
கொலை செய்யப்பட்ட முருகேசனை கிணற்றில் தலைகீழாக தொங்கவிட்டு அடித்து துன்புறுத்தியதை மேற்கோள் காட்டி குற்றம் சாட்டப்பட்டவர்களின் காட்டுமிராண்டித்தனமும் அச்சமற்றத்தனமும் சாதாரண மக்களுக்கு அச்சம் ஊட்டும் வகையில் படுபயங்கரமாக இருந்தது இந்த சம்பவம் எனவும், குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் தங்களது பணியை ஒழுங்காக செய்யாமல், காவலர்கள் பொய்யான ஆவங்களையும் பொய்யான நபர்களையும் சேர்த்து இந்த வழக்கினை திசை திருப்பியதால் அவர்களுக்கு ஹரியானா உயர்நீதிமன்றத்தின் உத்தரவினை மேற்கோள் காட்டி ஆயுள் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது, மேலும் இவர்களின் சார்பாக எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிக்கப்பட்ட முருகேசன் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் வழங்க வேண்டும்.
மேலும் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட அய்யாசாமி, குணசேகரன் என்பவர்களை இரண்டு நாட்கள் கட்டிவைத்து அடித்துள்ளனர் ஆதலால் அவர்களுக்கு என எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் தீர்ப்பு கூறி முடித்தபின், "தமிழ் மண்ணில் இப்படி ஒரு சம்பவம் இனி நடக்கூடாது , மேலும் மதுரையை கண்ணகி எரித்தை போல், சாதி ஆணவக்கொலை ஆனது இந்த கண்ணகி எரித்ததாக இருக்கட்டும்" என கூறி முடித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வணிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion