மேலும் அறிய

Mettur Dam: வாரத்தின் முதல் நாளில் அதிகரிக்க தொடங்கிய மேட்டூர் அணையின் நீர்வரத்து.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,100 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 853 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 656 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 795 கன அடியாக அதிகரித்துள்ளது. 

Mettur Dam: வாரத்தின் முதல் நாளில் அதிகரிக்க தொடங்கிய மேட்டூர் அணையின் நீர்வரத்து.

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 43.95 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 14.21 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,100 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 2,100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Mettur Dam: வாரத்தின் முதல் நாளில் அதிகரிக்க தொடங்கிய மேட்டூர் அணையின் நீர்வரத்து.

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 92.97 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 17.78 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 167 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4338 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 50.38 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 11.38 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 151 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விஜய்யின் ஆனஸ்ட்ராஜ்.. தவெகவில் இனி இவர்தான் எல்லாம்.. யார் இந்த அருண் ராஜ் ஐஆர்எஸ்?
விஜய்யின் ஆனஸ்ட்ராஜ்.. தவெகவில் இனி இவர்தான் எல்லாம்.. யார் இந்த அருண் ராஜ் ஐஆர்எஸ்?
IPL SRH Vs RCB: இஷான் கிஷனின் அதிரடியுடன் 231 ரன்களை குவித்த ஹைதராபாத் - எட்டிப் பிடிக்குமா பெங்களூரு.?
இஷான் கிஷனின் அதிரடியுடன் 231 ரன்களை குவித்த ஹைதராபாத் - எட்டிப் பிடிக்குமா பெங்களூரு.?
Trump Vs Apple: சாரே, நீங்க பண்றதெல்லாம் நியாயமா.? ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப் - இந்தியாவுக்கும் இழப்பு
சாரே, நீங்க பண்றதெல்லாம் நியாயமா.? ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப் - இந்தியாவுக்கும் இழப்பு
Red Alert: கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட்! இன்னும் 24 மணி நேரத்தில் காற்றழுத் தாழ்வு மண்டலம் - உங்க மாவட்டத்தில் எப்படி?
Red Alert: கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட்! இன்னும் 24 மணி நேரத்தில் காற்றழுத் தாழ்வு மண்டலம் - உங்க மாவட்டத்தில் எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Palani Bus Driver Heart Attack CCTV |ஓடும் பேருந்தில் ஓட்டுநர் மரணம்!நொடிப்பொழுதில் தப்பிய பயணிகள்Jayam Ravi vs Aarti |‘’ஆர்த்தி, ரவி கம்முனு இருங்க’’கறார் காட்டிய நீதிமன்றம் கப்சிப்பான CELEBRITIESPonmudi vs Lakshmanan |பொன்முடிக்கு NO !ORDER போட்ட லட்சுமணன்ஆடிப்போன M.R.Kதூதுவிடும் திமுக, அதிமுக தலைகள்! கண்டிஷன் போடும் விஜய்! விஸ்வாசம் தான் முக்கியம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்யின் ஆனஸ்ட்ராஜ்.. தவெகவில் இனி இவர்தான் எல்லாம்.. யார் இந்த அருண் ராஜ் ஐஆர்எஸ்?
விஜய்யின் ஆனஸ்ட்ராஜ்.. தவெகவில் இனி இவர்தான் எல்லாம்.. யார் இந்த அருண் ராஜ் ஐஆர்எஸ்?
IPL SRH Vs RCB: இஷான் கிஷனின் அதிரடியுடன் 231 ரன்களை குவித்த ஹைதராபாத் - எட்டிப் பிடிக்குமா பெங்களூரு.?
இஷான் கிஷனின் அதிரடியுடன் 231 ரன்களை குவித்த ஹைதராபாத் - எட்டிப் பிடிக்குமா பெங்களூரு.?
Trump Vs Apple: சாரே, நீங்க பண்றதெல்லாம் நியாயமா.? ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப் - இந்தியாவுக்கும் இழப்பு
சாரே, நீங்க பண்றதெல்லாம் நியாயமா.? ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப் - இந்தியாவுக்கும் இழப்பு
Red Alert: கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட்! இன்னும் 24 மணி நேரத்தில் காற்றழுத் தாழ்வு மண்டலம் - உங்க மாவட்டத்தில் எப்படி?
Red Alert: கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட்! இன்னும் 24 மணி நேரத்தில் காற்றழுத் தாழ்வு மண்டலம் - உங்க மாவட்டத்தில் எப்படி?
IND vs ENG: கோலிக்கு பதில் களமிறங்கப்போவது யார்? ப்ளேயிங் லெவனில் சுதர்சனா? கருண் நாயரா?
IND vs ENG: கோலிக்கு பதில் களமிறங்கப்போவது யார்? ப்ளேயிங் லெவனில் சுதர்சனா? கருண் நாயரா?
Bus Driver Sudden Death: ஓடிக்கொண்டிருந்த பேருந்து; திடீரென மாரடைப்பால் சரிந்த ஓட்டுநர், அடுத்து நடந்தது என்ன.?
ஓடிக்கொண்டிருந்த பேருந்து; திடீரென மாரடைப்பால் சரிந்த ஓட்டுநர், அடுத்து நடந்தது என்ன.?
Seeman on Stalin: 3 வருஷமா நிதி ஆயோக்கிற்கு போகாத ஸ்டாலின் இப்போ மட்டும் ஏன் போறார் தெரியுமா.? சீமான் சுருக்..
3 வருஷமா நிதி ஆயோக்கிற்கு போகாத ஸ்டாலின் இப்போ மட்டும் ஏன் போறார் தெரியுமா.? சீமான் சுருக்..
திசைதிருப்பும் ஆளுநர்.. 25,000 சாதிகள் இருக்கு.. பிரிச்சது யார்? பொங்கி எழுந்த மனோ தங்கராஜ்
திசைதிருப்பும் ஆளுநர்.. 25,000 சாதிகள் இருக்கு.. பிரிச்சது யார்? பொங்கி எழுந்த மனோ தங்கராஜ்
Embed widget