மேலும் அறிய

C.V. Shanmugam : திமுக வெற்றி பெற என்ன வேண்டுமானாலும் செய்யும்: தொண்டர்களுக்கு சி.வி.சண்முகம் எச்சரிக்கை!

விழுப்புரம் : மக்களுக்கு செல்ல வேண்டிய வரி சலுகையை மக்களுக்கு அளிக்காமல் திமுக அரசு தடுக்கிறது. மத்திய அரசு கொடுக்கும் சலுகைகளை திமுக தடுத்து வருகிறது - சிவி சண்முகம் குற்றச்சாட்டு

விழுப்புரம் : தேர்ரலுக்கு இன்னும் 60 நாள் தான் உள்ளது. தேர்தல் தொடங்கிவிட்டதும், எல்லோரும் தயாராக, எச்சரிக்கையாக இருங்கள். திமுக வெற்றி பெற என்ன வேண்டுமானாலும் செய்யும் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேச்சு.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் காந்தி சிலை பகுதியில் பாஜகவின் சார்பில் தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம் என்ற தலைப்பில் பாஜக மாநில தலைவர் நயினார் ராஜேந்திரன் கலந்து கொண்ட பரப்பரை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்.,

பாஜகவின் சார்பில் மாநில தலைவர் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் எழுச்சி பயனத்தை நடத்தி வரும் மாநில தலைவர், எனது சகோதரர் நனயினார் நாகேந்திரன். எழிச்சி பயணத்தால் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். எழுச்சியோடு, உற்சாகத்தோடும் மக்களும், நமும் தயாராகிவிட்டோம். தேர்தல் எப்போது அறிவிப்பார்கள் என காத்திருக்கிறோம். திமுக அரசை தூக்கி எரிய மக்கள் தயாராகிவிட்டனர். தலைகுனிந்துள்ள தமிழ்நாடு தலை நிமிர, தொழில் வளர்ச்சியில் பின்னோக்கி சென்றுக்கொண்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களுக்கு செல்கின்றது. மத்திய அரசோடு முரன்பட்டுள்ளதால் தமிழ்நாடு பின்னோக்கி சென்று வருகிறது. மத்தியில், மாநிலத்தில் நம்முடைய ஆட்சி இருந்தால் தமிழ்நாடு வளர்ச்சி அடைய முடியும் என பிரதமர் கூறுகிறார்.

கேட்காமலே அள்ளி தரும் அரசு மத்திய அரசு. தமிழ்நாட்டில் கஞ்சா போதை அதிகரித்துள்ளது. காவல்துறை முதல்வர் கையில் உள்ளது. செயல்படாத முதல்வர். உலகத்திலேயே இந்தியா தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால் உலக அரங்கில் இந்தியா தலை நிமிர்ந்துள்ளது. வரி சீரமைப்பை கொண்டு வந்துள்ளவர் மோடி. மக்களுக்கு செல்ல வேண்டிய வரி சலுகையை மக்களுக்கு அளிக்காமல் திமுக அரசு தடுக்கிறது. மத்திய அரசு கொடுக்கும் சலுகைகளை திமுக தடுத்து வருகிறது. தமிழ்நாடு விடுதலை பெற வேண்டும். தேர்ரலுக்கு இன்னும் 60 நாள் தான் உள்ளது. தேர்தல் தொடங்கிவிட்டதும். எல்லோரும் தயாராக, எச்சரிக்கையாக இருங்கள். திமுக வெற்றி பெற என்ன வேண்டுமானாலும் செய்யும். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமையும். என பேசினார்.

பாஜகவின் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் பேச்சு ; 

 
எழுச்சி பயணத்தின் 52 வது நாள் இன்று. நாளை 53வது நாளில் பயணம் நிறைவடையுள்ள தருவாயில் நாளைய தினம் உள்துறை அமைச்சர் திருச்சி வந்து புதுக்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியின் புனித பயணம் புதுக்கோட்டையில் இருந்து தொடங்குகிறது. பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் எத்தனையோ கூட்டணி வந்து சேரும். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைப்பார். நானும் எடப்பாடி.பழனிசாமியும் மருது சகோதர்களாக பணியாற்றிய காலம் உண்டு. மீண்டும் இந்த கூட்டணி உருவாக்கியுள்ளது. அதிமுகவில் உள்ள அனைவரும் எல்லோரும் என் நண்பர்கள். ஆனால் சிவி.சண்முகம் என்னுடைய சகோதரர். எல்லா தொகுதியும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் தொகுதிகள். மயிலம் தொகுதி தான் நம்மை வாழ்விக்கும் தொகுதியாக உள்ளது. ஆட்சிக்கு வரும்போது மின் கட்டனம், வரியை உயர்த்தமாட்டோம் என கூறினார்கள். ஆனால் மின் கட்டனத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. மோடியை கொலை செய்வேன் என திமுகவினர் கூறினார்கள் ஆனால் நடவடிக்கை இல்லை. ஆனால் சவுக்கு சங்கரை வீடு புகுந்து கைது செய்தனர். பள்ளி, கல்லூரி வாசலில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. பாலியல் வன்கொடுமை 52 சதவீதம் கூடியுள்ளது. குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. போதை பழக்கத்தால் வட இந்தியர்களை தாக்கி வருகிறார்கள். ஆட்சி வருவதற்கு முன்பாக பழைய ஓய்வுதியத்தை தருவோம் என கூறுகின்றீர்களே, ஆனால் ஐந்து ஆண்டு முடிய போகிற நேரத்தில் அறிவித்துள்ளீர்கள். பார்க்கின்ற மக்களும், அதிகாரிகளும் ஏமாளிகளா?. என்றைக்கு அரசாணை பிறப்பிக்கப் போகிறீர்கள்.
 
திமுக கூட்டணி கலகலத்துப் போய்யுள்ளது. காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் கேட்கிறது. விடுதலை சிறுத்தை கட்சி வேண்டா வெறுப்பாக இருப்பதாக கூறியுள்ளார்கள். பொங்கல் முடிந்தால் தான் தெரியும் யார், யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது தெரியும். இந்த ஆட்சி மாற வேண்டும். எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வர வேண்டும். அப்போதுதான் மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே மாநில ஆட்சி இருந்தால் தான் மக்களுக்கு நிதிகளை தர முடியும். 14 லட்சம் கோடி மற்றும் 11 மருத்துவக் கல்லூரிகள் இபிஎஸ் ஆட்சி காலத்தில் வந்துள்ளது. கொடுத்தது மோடி. காசி தமிழ்ச் சங்கம் நடத்தியது பிரதமர் மோடி. எல்லா இடங்களிலும் யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்கிற தாரக மந்திரத்தை சொல்பவர் மோடி. துணை குடியரசுத் தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி.ராதாகிருஷ்ணன் அவர்களை நியமித்துள்ளார்.
 
நயினார் நாகேந்திரன் அல்லது சிவி.சண்முகம் உருவாக்கி கூட்டணி அல்ல. மோடியும், எடப்பாடி.பழனிச்சாமியும் உருவாக்கிய கூட்டணி. அதிமுக எம்ஜிஆ-ரால் உருவாக்கப்பட்ட அற்புதமான இயக்கம். அமெரிக்க அதிபராக இருந்தாலும், ரஷ்ய அதிபராக இருந்தாலும் எல்லோரும் நரேந்திர மோடியிடம் கேட்டு பேசுகிறது காலத்தில் நாடு உருவாக்கியுள்ளது. வல்லரசு நாடாக மாறி வருகிறது. திமுக ஓட்டுக்கு 3000ஆயிரம் கொடுப்பதற்காக பணத்தை பதிக்க வைத்துள்ளார்கள். செந்தில் பாலாஜி ஒரு கிராம் தங்கம் கொடுக்கப்போவதாக கூறுகிறார்கள். எனவே திமுக ஆட்சியை அகற்ற இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

தலைப்பு செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் சலுகை! வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவது எப்படி?
மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் சலுகை! வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவது எப்படி?
Fact Check: சட்டவிரோதமாக லஞ்சம் வாங்கிய திருப்பூர் அரசுப்பள்ளி ஆசிரியர்? நடந்தது என்ன? வெளியான தகவல்!
Fact Check: சட்டவிரோதமாக லஞ்சம் வாங்கிய திருப்பூர் அரசுப்பள்ளி ஆசிரியர்? நடந்தது என்ன? வெளியான தகவல்!
Tiruppur Power Shutdown: திருப்பூரில் நாளை(04-06-26) மின் தடை! உங்கள் ஏரியா இருக்கா? செக் பண்ணுங்க
Tiruppur Power Shutdown: திருப்பூரில் நாளை(04-06-26) மின் தடை! உங்கள் ஏரியா இருக்கா? செக் பண்ணுங்க
Udumalpet Power Cut (04-06-2026): உடுமலைப்பேட்டையில் நாளை எங்கெல்லாம் மின்தடை? இதோ முழு லிஸ்ட்
Udumalpet Power Cut (04-06-2026): உடுமலைப்பேட்டையில் நாளை எங்கெல்லாம் மின்தடை? இதோ முழு லிஸ்ட்

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
Donald Trump: “நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.!“ ஒப்புக்கொண்ட ட்ரம்ப்; ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எனவும் பேட்டி
“நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.!“ ஒப்புக்கொண்ட ட்ரம்ப்; ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எனவும் பேட்டி
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
Central Minister on Aviation: 2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்
2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்
Central Minister on Hormuz: ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
Best Mileage CNG Cars: பட்டையை கிளப்பும் சிஎன்ஜி கார்கள் விற்பனை.! சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 CNG கார்கள் லிட்ஸ் இதோ
பட்டையை கிளப்பும் சிஎன்ஜி கார்கள் விற்பனை.! சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 CNG கார்கள் லிட்ஸ் இதோ
Cheapest 360 Degree Camera Cars: காஸ்ட்லி SUV-க்களுக்கே டஃப்.! வெறும் ரூ.6.99 லட்சம் பட்ஜெட்லயே 360 டிகிரி கேமரா.! டாப் 5 கார்கள் லிஸ்ட்
காஸ்ட்லி SUV-க்களுக்கே டஃப்.! வெறும் ரூ.6.99 லட்சம் பட்ஜெட்லயே 360 டிகிரி கேமரா.! டாப் 5 கார்கள் லிஸ்ட்
Embed widget