மேலும் அறிய
கடலூரில் எம்ஜிஆர் சிலையை அகற்ற முயன்ற மாநகராட்சி... வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்
பழைய எம்ஜிஆர் சிலை அங்கு இருந்ததற்கான ஆதாரங்களை அதிமுகவினர், மாநகராட்சி அதிகாரிகளிடம் சமர்ப்பித்த நிலையில் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

அதிமுகவினர்
எம்ஜிஆர் சிலை புதுப்பிக்கப்பட்ட நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் சிலையை அகற்ற வந்ததால் அதிமுகவினர் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் அடுத்த புதுப்பாளையம் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலை இருந்து வந்துள்ளது. அந்த சிலை சேதம் அடைந்ததால் அதனை புதுப்பித்து, வர்ணம் தீட்டி அதே இடத்தில் சிலை வைக்கும் பணியை அதிமுகவினர் மேற்கொண்டு வந்தனர்.
கடலூர் புதுப்பாளையம் பகுதியில் எம்ஜிஆர் சிலை சீரமைத்த நிலையில் மீண்டும் வைக்கப்பட்டது. இந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் பழைய சிலையை அகற்றிவிட்டு புதிய சிலை வைக்கப்பட்டுள்ளதாக கூறி எம்ஜிஆர் சிலையை அகற்ற வந்தாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்து அங்கு திரண்ட அதிமுகவினர், கடலூர் மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து கடலூர் புதுநகர் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து பழைய எம்ஜிஆர் சிலை அங்கு இருந்ததற்கான ஆதாரங்களை அதிமுகவினர், மாநகராட்சி அதிகாரிகளிடம் சமர்ப்பித்த நிலையில் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தின் காரணமாக அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
உலகம்
இந்தியா
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion