7ஆண்டுகளில் தமிழ்நாட்டின் நிலை என்ன?- தொழில் அமைச்சரின் சூளுரை
Boxory Logistics மற்றும் Cargonix Xpress உடன் இணைந்து இரண்டு புதிய வணிகத்தை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
என்.டி.சி. (NTC ) குழுமம் Boxory Logistics மற்றும் Cargonix Xpress உடன் இரண்டு புதிய வணிகத்தை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
என்.டி.சி. குழுமத்தின் பங்குதாரர்கள், உலகளாவிய கூட்டாளிகள் சந்திப்பு ஈ.சி.ஆர்.-இல் உள்ள மகாபலிபுரத்தில் கல்தான் சமுத்திரா பேலஸ்சில் நடைபெற்றது. இதில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் NTC குழுமத்தின் நிறுவன தலைவர் சந்திரமோகன் Boxory Logistics, CARGONIX Xpress-ன் புதிய வணிகத்தை தொடங்கி வைத்தனர்.
இந்தியாவில் முதன்முறையாக, காற்றாலை கத்திகள் மற்றும் டவர் கூறுகளை கொண்டு செல்வதற்காக, NTC லாஜிஸ்டிக்ஸ் அதன் சொந்த தனிப்பயனாக்கப்பட்ட 70M டிரக் டிரெய்லரை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் NTC லாஜிஸ்டிக்ஸ், நீண்ட காற்றாலைகள் மற்றும் பிற பெரிய காற்றாலை விசையாழி போன்ற காற்று தளவாட ஏற்றுமதியில் இந்தியாவில் முதன்முதலில் நுழைந்துள்ளது. இதன் மூலம் 83 மீட்டர் நீளம் கொண்ட காற்றாலையை NTC நிறுவனம் கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது
இவ்விழாவில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
என்டிசி குழுமம் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டு, படிப்படியாக வளர்ந்து பல்வேறு துறைகளில் கால்பதித்து இன்று மிகப் பெரிய நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. இந்நிறுவனம் மேலும் மேலும் வளர்ந்து பல உயரங்களை தொட எனது வாழ்த்துகள். சந்திரமோகன் அவர்கள் பல தொழில்களை கையாள்பவர் மட்டும் அல்ல, உலகளவில் பல நண்பர்களை சம்பாதித்து வைத்துள்ளார். அது தான் அவரது மிகப்பெரிய பலமும், வெற்றிக்கு காரணமும் ஆகும். சந்திரமோகனின் இந்த நட்பான அனுகுமுறை தான் குறுகிய காலத்தில் அவர் வெற்றியடைய காரணம்.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Boxory Logistics,CARGONIX Xpress ஆகிய இரண்டு புதிய பிராண்டுகள் மிக அற்புதமானவை. பல நிறுவனங்களுடன் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது என்.டி.சி. இதில் பங்கெடுத்துள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் இந்த புதிய தொழிலில் இணைந்துள்ளது மகிழ்ச்சியான விஷயம்.
இந்த உலகம் வாய்ப்புகளால் நிறைந்திருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களை ஒப்பிடுகையில், மிக பலமாக பொருளாதார வத்தை கொண்டிருக்கும் மாநிலம் தமிழ்நாடு. இதை நான் மிகுந்த பெருமிதத்துடன் சொல்கிறேன். இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்களிப்பை தமிழ்நாடு அளித்து வருகிறது. இந்திய ஜிடிபியில் 12 சதவீதம் தமிழ்நாட்டின் பங்களிப்பாகும்.
உற்பத்தி தான் தமிழ்நாட்டின் மிகப்பெரிய பலம். இதன் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். எனவே தான் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், உற்பத்தியாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதில் முணைப்பாக இருக்கிறார். 2030 ஆண்டுக்குள் தமிழ்நாடு பொருளாதாரத்தில் தன்நிறைவு அடைய வேண்டும் என்ற மாபெரும் இலக்கை நோக்கி முதல்வர் நம்மை அழைத்து சென்று கொண்டிருக்கிறார். இந்த இலக்கை அடைய உற்பத்தியாளர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது. சுமார் 300 பில்லியன் அளவுக்கான பங்களிப்பை உற்பத்தியாளர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.
இதன் ஒரு பகுதியாக என்டிசி குழுமம் தனது பங்களிப்பை தருவது மகிழ்ச்சியான விஷயம். அதிலும் குறிப்பாக என்டிசி குழுமம் தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்களில் எனது தொழிலை விரிப்படுத்தி பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கு என்பது மிகுந்த மகிழ்ச்சியான செயல். அவர்களுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்", என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்