CM Stalin advisory team: முதல்வரின் பொருளாதார ‛ஐவர்’ கூட்டணியின் பணிகள் இது தான்!
இந்தக்குழுவின் பணி என்ன? இவர்கள் எவ்வாறு இயங்குவார்கள் என்பது குறித்து நிதித்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையில் இடம்பெற்றிருப்பவை..
பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் தமிழத்தில் உள்ள நிதி நிலையை சீர் செய்யவும் முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு அமைக்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனை குழுவில் ரகுராம் ராஜன், எஸ்தர் டஃப்லோ, ஜீன் ட்ரெஸ், அரவிந்த் சுப்ரமணியம், எஸ்.நாராயணன் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.இந்தக்குழுவின் பணி என்ன? இவர்கள் எவ்வாறு இயங்குவார்கள் என்பது குறித்து நிதித்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையில் இடம்பெற்றிருப்பவை..
1. பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளில் பொதுவான வழிகாட்டுதல்களை வழங்குவது. சமூகநீதி மற்றும் மனிதவள மேம்பாடு தொடர்பான குறிப்பாகப் பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான சமமான வாய்ப்புரிமை வழங்குவதில் ஆலோசனை.
2. மாநிலப் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி மேம்பாடு தொடர்பான ஆலோசனைகள் வழங்குவது
3.மாநிலத்தின் ஒட்டுமொத்த நிதி ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான ஆலோசனைகள் வழங்குவது
4. மக்களுக்கு சேவை செய்வதற்கான மாநில திறனை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை.
5. புதிய திட்டங்கள் மற்றும் சாத்தியப்படக்கூடிய தீர்வுகளுக்கான ஒரு வலுவான ஆலோசனை மையமாகத் திகழ்வது.
6.முதலமைச்சர் அல்லது நிதியமைச்சர் கேட்கும் எவ்வித தீர்வுக்கும் ஆராய்ந்து சாத்தியப்படக்கூடிய சிறந்த சமூகப் பொருளாதாரத் தீர்வுகளை வழங்குவது.
கவுன்சில் எப்படி இயங்க வேண்டும்?
1.பொருளாதாரக் கவுன்சிலைச் சேர்ந்த உறுப்பினர்கள் தேவையான பொழுதில் சந்திக்கவேண்டும்.
2. கவுன்சில் தனது குறிக்கோள்களை அடையத் தேவையான இயங்குதலைத் தானே முடிவு செய்துகொள்ளும் முழு அதிகாரம் வழங்கப்படுகிறது.,
3.கவுன்சில் வாய்மொழியாகவோ எழுத்துபூர்வமாகவோ அல்லது கொள்கை வடிவிலோ ஆலோசனைகளை வழங்கலாம்.
4. முதலமைச்சர் அல்லது அரசாங்கம் முன்வைக்கும் குறிப்பிட்ட தேவைகளுக்காக கவுன்சில் விரைந்து முடிவுகளைத் தரவேண்டும்.
Also Read: பொருளாதார ஆலோசனைக் குழு: ஆலோசகர்களை ஏற்றவர்கள் ஆலோசனையை ஏற்பார்களா
தொடர்புடைய செய்திகள்:
பெல்ஜியம் குடியுரிமையை விட்டுதந்து - இந்தியாவில் குடியேறிய ஜியான் ட்ரெஸ்!#Jeandreze #Stalin #MKStalin #economicrecoveryplanhttps://t.co/Ozpqc2tXWm
— ABP Nadu (@abpnadu) June 21, 2021
’ரகுராம் ராஜனின் சாதி என்ன!’ - கூகுளில் அலப்பறை செய்த இணையவாசிகள்#RaghuramRajan #GovernorSpeech #Caste https://t.co/TXq8iB2lRY
— ABP Nadu (@abpnadu) June 21, 2021
முதல்வர் ஸ்டாலினுக்கு ஆலோசனை சொல்லும் ஐந்து பேரின் பின்புலங்கள்https://t.co/7USMzrtlKh
— ABP Nadu (@abpnadu) June 21, 2021
பொருளாதார நிபுணர்கள் அரவிந்த் சுப்பிரமணியன், ஜான் ட்ரீஸ், எஸ்.நாராயணன் ஆகியோரை கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்படும் -பேரவையில் ஆளுநர் #BanwarilalPurohit #TamilNadu #Tamilnaduassembly #TNAssemblySession
— ABP Nadu (@abpnadu) June 21, 2021
ABP NADU : https://t.co/4U07BlrglC pic.twitter.com/adHk8kODiz
நோபல் பரிசு வென்றவர்களிடம் ஆலோசனை கேட்கும் முதல்வர் ஸ்டாலின்..!https://t.co/ELNdYjG6xB
— ABP Nadu (@abpnadu) June 21, 2021