முதல்நாளே கோளாறு.. மோடி திறந்து வைத்த ராமேஷ்வரம் புதிய பாம்பன் பாலத்திற்கு ஏற்பட்ட நிலைமை
ராமேஷ்வரம் புதிய பாம்பன் செங்குத்து தூக்கு பாலம் திறந்து வைத்த ஒரு சில மணி நேரங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், பாலத்தின் ஒரு பக்கம் ஏற்றமாகவும் மறுபுறம் இறக்கமாகவும் உள்ளதால் பாலத்தை கீழே இறக்க முடியாமல் பொறியாளர்கள் தவித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ராமேஷ்வரத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த புதிய பாம்பன் பாலத்தில் பழுது ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பன் செங்குத்து தூக்கு பாலம் திறந்து வைத்த ஒரு சில மணி நேரங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், பாலத்தின் ஒரு பக்கம் ஏற்றமாகவும் மறுபுறம் இறக்கமாகவும் உள்ளதால் பாலத்தை கீழே இறக்க முடியாமல் பொறியாளர்கள் தவித்துள்ளனர். இதனை சரி செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதையடுத்து, பழுது சரிசெய்யப்பட்டு செங்குத்துப் பாலம் கீழே இறக்கப்பட்டது.
நாட்டின் பெருமை:
மூன்று நாள் அரசுமுறை பயணமாக இலங்கைக்கு சென்றுவிட்டு இன்று ராமேஷ்வரம் திரும்பிய பிரதமர் மோடி, 700 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டின் பாக் ஜலசந்தியைக் கடந்து செல்லும் 2.07 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தப் பாலம், இந்தியாவின் பொறியியல் திறமைக்கும் தொலைநோக்குப் பார்வை கொண்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் ஒரு சான்றாக நிற்கிறது.
கடல் மேல் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தின் 72.5 மீட்டர் நீளமுள்ள பகுதியை தூக்கி, அதன் கீழ் கப்பல்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி 17 மீட்டர் உயரத்திற்கு தூக்கப்படும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
முதல்நாளே பழுதான புதிய பாம்பன் பாலம்:
இரண்டு ரயில் பாதைகளை தாங்கும் திறன் கொண்ட இந்தப் பாலத்தில் தற்போது ஒரு பாதையில் மட்டும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மணிக்கு 80 கிமீ வேகம் வரை ரயில் வேகத்தை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்து மற்றும் அதிக சுமைகளைக் கையாளும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தப் பாலம், ராமேஸ்வரம் தீவையும், நிலப்பரப்பில் உள்ள மண்டபம் பகுதியையும் இணைக்கிறது. இந்த நிலையில், ஒட்டுமொத்த நாட்டையே திரும்பி பார்க்க வைத்த புதிய பாம்பன் பாலம், திறந்து வைக்கப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது.
பாலத்தின் ஒரு பக்கம் ஏற்றமாகவும் மறுபுறம் இறக்கமாகவும் உள்ளதால் பாலத்தை கீழே இறக்க முடியாமல் பொறியாளர்கள் தவித்துள்ளனர். இதனை சரி செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதையடுத்து, பழுது சரிசெய்யப்பட்டு செங்குத்துப் பாலம் கீழே இறக்கப்பட்டது.




















