மேலும் அறிய

TANGEDCO: உதய் திட்டத்தை தமிழ்நாடு மின்சார துறை சரியாக பயன்படுத்தவில்லை - CAG ரிப்போர்ட் தகவல்!

TANGEDCO:தமிழ்நாடு மின்சார துறை உதய் திட்டத்தை சரியாக பயன்படுத்தவில்லை- CAG ரிப்போர்ட் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் Tamil Nadu Generation and Distribution Corporation (Tangedco) உஜவால் யோஜனா திட்டத்தை சரியாக பயன்படுத்த தவறிவிட்டதாக இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை அறிக்கையில் (The Comptroller and Auditor-General’s report) தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை வெளியிட்டுள்ள மார்ச் 2020 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில்,   2015-2016 மற்றும் 2019-2020 ஆம் ஆண்டில்  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயல்பாடுகள் மற்றும் நிதிநிலை குறித்து விளக்கமளித்துள்ளது.

இந்த அறிக்கையில் மத்திய அரசு அறிமுகம் செய்த உஜ்வால் டிஸ்காம் அசுரன்ஸ் யோஜனா (Ujwal DISCOM Assurance Yojana (UDAY)) என்ற திட்டத்தை தமிழ்நாடு மின்சார துறை முழுவதுமாக பயன்படுத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

மின்சார கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யாதது, அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கியது, லோ பிளான்ட் லோட் ஃபெக்டர்(low plant load factor), அதாவது குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு மின் உற்பத்தி மையத்தில் இருந்து  உற்பத்தி செய்யப்படுக் கூடிய அதிகபட்ச மின்சார அளவின் விகிதம்,   டிரான்ஸ்ஃபாமர்ஸ்கள் தேவையான அளவுகளில் இல்லாதது, தரமான கண்டக்டார்ஸ் பயன்படுத்தாததால்  ஏற்படும் இழப்புகள் – இவைகளால் டிரான்ஸ்ஃபாமர்களில் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்காதது,  சேவை வழங்குவதற்கான சராசரி செலவு (average cost of supply (ACS)  மற்றும்  அதிலிருந்து கிடைக்கும் சராசரி வருவாய் (average revenue realised (ARR)) இரண்டிற்கும் இடையேயான இடைவெளியை அதிகரிக்க செய்தது- இவை எல்லாவற்றிற்கும் மேலாக உதய் திட்டத்தை திறம்பட கண்காணிக்க தவறியது ஆகியவைகள் தமிழ்நாடு மின்சார துறை சிறப்பாக செயல்படமால் போனதற்கான காரணங்களாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள மாநிலங்களின் மின்சார உற்பத்தி மற்றும் பகிர்தலில் சிறப்பாக செயலாற்ற கடந்த நவம்பர் 2015 ஆம் ஆண்டு உதய் (UDAY) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.  ஆனால், இந்த திட்டம் எட்டவேண்டிய இலக்கினை அடையவில்லை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, மாநில அரசு 75 சதவீதம் கடனை பெறலாம். ஆனால்,  மாநில அரசு 34.38 சதவீதம் தொகையை மட்டுமே கடனாக பெற்று கொண்டது. இதன் காரணமாக டான்ஜெட்கோ ரூ.30,502 கோடி அளவிற்கு கடன் சுமையை தொடர்ந்தது. அதன்பின்னர், 2017- 2020  கூடுதல் வட்டியாக ரூ. 9,150 கோடி சுமை கடன் ஏற்பட்டுள்ளது. மேலும், மாநில அரசு  மீதமுள்ள 25 சதவீத கடன் வட்டி அளவிற்கான ரூ. 7,605 கோடி கடனிற்கான பாண்ட் வழங்குவதில் தாமதமாக செயல்பட்டதும் இதற்கு காரணமாக அமைந்தது.

உதய் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு மின்சார துறையின் கீழ் உற்பத்தி செய்யப்படும் மின்சார செலவினை குறைப்பதற்காக, அனல் மின் நிலையங்களை மேம்படுத்த திட்டம் இருந்தது. இதன் மூலம் மின்சாரம் வாங்குவது குறைக்கப்படும். ஆனால், உதய் திட்டம் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன், பின் என்ற முறையில் இந்த அறிக்கையில் தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின் தரவுகள் ஆராயப்பட்டுள்ளது. அதன்படியே அறிக்கையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

2015-2016 ஆம் ஆண்டில் ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான உற்பத்தி தொகை ரூ.3.49 இல் இருந்து ரூ.3.94 ஆக உயர்த்தப்பட்டது. அதேவேளையில், மின்சாரம் வாங்குவதறகான தொகை, ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.4.32-இல் இருந்து ரூ.4.94 ஆக உயர்ந்தது. மேலும், நான்கு அனல் மின்நிலையங்களின் லோட் ஃபேக்டர் (plant load factor), அதாவது, அனல் மின்நிலையங்களில் உற்பத்தி செய்யும் ஆற்றல் மற்றும் அதன் பயன்பாட்டின் கண்கீடு சராசரியா 56.80 சதவீதம் தான் இருந்திருக்கிறது. ஆனால், இது 80 சதவீதமாக இருந்திருக்க வேண்டும். தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் மாநிலத்தில் உள்ள அனல் மின்நிலையங்களின் செயல்திறனை அதிகரிக்க  நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (National Thermal Power Corporation Limited,)-இன் உதவியை கோரவும் தவறிட்டது.

டன்ஜெட்கோவின் கோரிக்கையைத் தமிழ்நாடு அரசு ஏற்காத காரணத்தால் ரூ.1,003 கோடி கூடுதல் வட்டி சுமை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு ஒரு பகுதியை மட்டுமே கடனை ஏற்றதால் டான்ஜெட்கோவின் நிலுவை கடன் 2015 -20 ஐந்தாண்டு காலத்தில் ரூ.81,312 கோடியில் இருந்து ரூ.1.23 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget