Tancet Ceeta Exam: டான்செட், சீட்டா நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - அண்ணா பல்கலை., அறிவிப்பு
Tancet Ceeta Exam 2024: எம்பிஏ, எம்சிஏ, எம்.இ., எம்.டெக். உள்ளிட்ட படிப்புகளில் சேர நடத்தப்படும் டான்செட், சீட்டா நுழைவுத்தேர்வுக்கு, பிப்ரவரி 12ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Tancet Ceeta Exam 2024: எம்பிஏ, எம்சிஏ, எம்.இ., எம்.டெக். உள்ளிட்ட படிப்புகளில் சேர நடத்தப்படும் டான்செட், சீட்டா நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, அவகாசத்தை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Tancet Ceeta Exam 2024:
2024-25 கல்வியாண்டில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்பில் சேர்வதற்கான டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எம்.இ., எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்புகளில் சேர்வதற்கான சீட்டா நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, TANCET, CEETA தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 12-ம் தேதி வரை அவகாசத்தை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது. https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் இல்லை என்ற போதிலும், டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். முன்னதாக தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடையை இருந்த நிலையில், மேலும் 5 நாட்களுக்கு அந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் எப்போது?
எம்.சி.ஏ முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான தேர்வு வருகிற மார்ச் 9ஆம் தேதி காலையும், எம்.பி.ஏ., தேர்வு மதியமும் நடக்கிறது. எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க்., முதுநிலை பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான சீட்டா நுழைவுத் தேர்வு வருகிற மார்ச் 10ம் தேதி காலை நடைபெறும். தமிழகத்தின் 14 நகரங்களில் தேர்வு நடைபெற உள்ளது. மாணவர் சேர்க்கை நடைபெறும்போது மதிப்பெண் சான்றிதழ்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு முடிவுகள் மார்ச் மாத இறுதியில் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மே மாதம் நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?
தேர்வர்கள் https://tancet.annauniv.edu/tancet என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
புதிதாக விண்ணப்பிக்க Sign Up என்ற பொத்தானை சரியான தகவல்களை உள்ளிட்டு அளிக்க வேண்டும்.
ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்கள், Login செய்து விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: https://tancet.annauniv.edu/tancet
தொலைபேசி எண்கள்: 044 – 22358314 / 22358289
இ- மெயில் முகவரி: tanceeta@gmail.com
சிஇஇடிஏ சீட்டா தேர்வு
கடந்த 2022ஆம் ஆண்டு வரை எம்.இ. (முதுகலை பொறியியல்), எம்.டெக். (முதுகலை தொழில்நுட்பம்), எம்.ஆர்க். (முதுகலை கட்டிடவியல்) எம்.பிளான் (முதுகலை திட்டமிடல்) (M.E. M.TECH., M.ARCH., M.PLAN) படிப்புகளுக்கு டான்செட் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 2023ஆம் ஆண்டில் இருந்து சிஇஇடிஏ எனப்படும் பொது பொறியியல் நுழைவுத் தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை (CEETA- COMMON ENGINEERING ENTRANCE TEST AND ADMISSIONS) நடத்தப்பட்டு வருகிறது. எனினும் தொலைதூரக் கல்வித் திட்டத்தின் மூலம் B.E, B.Tech., Degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாது. சிஇஇடிஏ தேர்வு மூலமாக, அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த மத்திய அரசின் நிதி உதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்களும் மாணவர் சேர்க்கை செயல்முறையை மேற்கொள்ள முடியும். ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர்வுகள் நடத்தப்படும்.