இன்று இரவு 9 மாவட்டங்களில் மழை பெய்யும்! நாளைய வானிலை எப்படி?
Tamilnadu Weather Updates: தமிழ்நாட்டில் இன்று இரவு கோவை , தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று இரவு 10 வரையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டின் அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து பார்ப்போம்.
NOWCAST pic.twitter.com/7PiGEd6n5h
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) March 23, 2025
நாளைய வானிலை:
தென் இந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில் , கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. மேலும், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் நாளை ( மார்ச் 24 ) ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
25-03-2025 மற்றும் 26-03-2025:
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
27-03-2025 முதல் 29-03-2025 வரை:
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Also Read: Solar Eclipse: பகலில் மறையும் சூரியன்.! வருடத்தின் முதல் சூரிய கிரகணம்: எப்போது?
Also Read: பாம்பன் பாலம் ரெடி: வரார் பிரதமர் மோடி: திறப்பு எப்போது? ட்ரோன் காட்சி இதோ!
சென்னை நாளைய வானிலை:
சென்னையில் நாளைய வானிலையானது (24-03-2025), வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.





















