TamilNadu Rain: இன்று 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 8 மாவட்டங்களுக்கு கனமழை: இந்த மாவட்ட மக்கள் உஷார்..!
TN RAIN UPDATES: தமிழ்நாட்டில் இன்று பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 2 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், 8 மாவட்டங்களுக்கு கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று மழை பெறும் மாவட்டங்கள்:
நீலகிரி மற்றும் கோவை ஆகிய 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு , வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
மன்னார் வளைகுடா, தெந்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்றானது, மணிக்கு 35 கி.மீ முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே மணிக்கு 55 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆகையால், இந்த பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.
காலை 10 மணிவரை:
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 13, 2024
இன்று காலை 10 மணிவரை, செங்கல்பட்டு, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவாரூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Also Read: ஆடிப் பட்டம் தேடி பார்த்து... விதைக்கணும்-நிலக்கடலை விதைப்பு பணியை துவங்கிய விவசாயிகள்