(Source: ECI/ABP News/ABP Majha)
TN Rain: இன்று இரவு 9 மாவட்டங்களில் மழை இருக்கு...இந்த மாவட்ட மக்கள் கவனமா இருங்க..
Tamilnadu Rain: தமிழ்நாட்டில் இன்று இரவு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று இரவு 10மணிவரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
9 மாவட்டங்களில் மழை:
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, குமரி, நெல்லை , தென்காசி மற்றும் தேனி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 1, 2024
இந்நிலையில், இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், இரவு நேரங்களில் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்து கொள்ளுங்கள்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்தியாவில் மழை:
இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக மழை பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில், தென்னிந்தியாவின் மிகவும் முக்கியமான தெலங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், அந்த இரண்டு மாநிலங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 1, 2024