நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் 17-ந் தேதியுடன் நிறைவு - மாநில தேர்தல் ஆணையம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களுக்கான பிரச்சாரம் வரும் 17-ந் தேதி மாலை 6 மணியுடன் நிறைவு பெறுவதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரி இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
“ தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதற்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு 19-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிகளின்படி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் ஏனைய பிரச்சாரங்கள் அனைத்தையும் வாக்குப்பதிவு முடிவுபெறும் நேரத்தில் இருந்து 48 மணி நேரத்திற்கு முன்பாக, அதாவது 17.2.2022 மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது.
தேர்தல் பிரச்சாரம் முடிவிற்கு வந்த பின்னர், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் வாக்காளர்கள் அல்லாத வெளியில் இருந்து அழைந்து வரப்படம் அரசியல் கட்சி பிரமுகர்கள், கட்சித் தொண்டர்கள் அனைவரும் அந்த உள்ளாட்சி பகுதியில் இருந்து வெளியேறிவிட வேண்டும் என்றும், அவ்வாறு வெளியேறாதவர்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தினால் தெரிவிக்கப்படுகிறது. “
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால் இந்த தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளும், அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ம.க., நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதிமய்யம் ஆகிய கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு பகுதி மக்களிடமும் காணொலி காட்சி மூலமாக தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்