மேலும் அறிய
Advertisement
Tamilnadu RoundUp: சென்னையில் நாளை விமான சாகசம்! வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- ஏடிஎம் மையங்களில் 24 மணி நேரமும் காவலாளிகளை நியமிக்க வேண்டும் – வங்கிகளுக்கு காவல்துறை அறிவுறுத்தல்
- வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி அக்டோபர் 29ம் தேதி தொடக்கம்; நவம்பரில் 4 நாட்கள் சிறப்பு முகாம் – தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரதாப் சாஹூ தகவல்
- சென்னையில் நாளை விமானப்படை சாகச நிகழ்ச்சி – முக்கிய பகுதிகளின் வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம்
- பராமரிப்பு பணி காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் வரும் 7ம் தேதி காலை 8 மணி வரை இயங்காது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- புதுக்கோட்டையில் ஆங்கிலேயர் காலத்தில் தமிழில் எழுதப்பட்ட மைல் கல் கண்டெடுப்பு – ஆய்வாளர்கள் சோதனை
- கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மீண்டும் தொடங்கியது மின் உற்பத்தி – முதற்கட்டமாக 160 மெகாவாட் மின் உற்பத்தி
- திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, சேலம் உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நேற்று இரவு கொட்டித் தீர்த்தது கனமழை
- தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- முதுமலை காப்பகத்தில் விலங்குகளின் எண்ணிக்கை கணக்கெடுப்பு – அழியும் பட்டியலில் உள்ள 21 விலங்கு இனங்கள் இருப்பதாக தகவல்
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை; ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்து அதிகரிப்பு
- எஸ்.சி., எஸ்.டி. இட ஒதுக்கீட்டில் உள்ள உள் ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு – தமிழ்நாட்டில் பல இடங்களில் இனிப்புகள் வழங்கி மக்கள் கொண்டாட்டம்
- திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே சிலிக்கான் மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் – 16ம் தேதி பேச்சுவார்த்தை
- மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதனின் மனு 2வது முறையாக தள்ளுபடி
- செங்கல்பட்டு தசரா விழாவில் அனுமதி பெறாமல் வைத்த ராட்டினங்களை அகற்றிய அதிகாரிகள் – கடை உரிமையாளர்கள் வாக்குவாதம்
- புதிதாக உருவாக்கப்படும் நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு – நெல்லையில் சபாநாயகர் அப்பாவிடம் கோரிக்கை மனு அளித்த மக்கள்
- ஆந்திராவில் இருந்து வரத்து குறைந்ததால் கிருஷ்ணகிரியில் தக்காளி விலை உயர்வு
- கீழ்பவானியில் இருந்து முறை வைத்து தண்ணீர் திறக்க விவசாயிகள் எதிர்ப்பு
- சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி அருகே மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்து – இஸ்லாமியர்கள் இணைந்து கந்தூரி விழா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion