மேலும் அறிய
Advertisement
Tamilnadu Round Up: துணை முதல்வர் உதயநிதிக்கு கூடுதல் அதிகாரம், போராட்ட களத்தில் அதிமுக - தமிழ்நாட்டில் இதுவரை!
Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் - உதயநிதிக்கு கூடுதல் அதிகாரம் வழங்க திட்டம் என தகவல்
- சென்னை கதீட்ரல் சாலையில் 46 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- 'ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்'-சென்னை காவல் ஆணையர் அருணிடம் விளக்கம்கேட்ட மனித உரிமைகள் ஆணையம்
- தேர்தல் பணிகளை தொடங்கிய திமுக - 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமனம்
- தமிழ்நாடு முழுவதும் இன்று அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் - சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தல்
- நாம் தமிழர் கட்சியில் இருந்து விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் விலகல் - உரிய மரியாதை அளிக்கவில்லை என சீமான் மீது குற்றச்சாட்டு
- டிசம்பரில் நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு பிறகு அதிமுகவில் மிகப்பெரிய மாற்றம் வரும்" - சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் கூட்டாக பேட்டி
- இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு 10ம் தேதியன்று ஆரஞ்சு அலெர்ட்
- ”சாம்சங் நிறுவனத்தின் அறிவிப்பு திசை திருப்பும் நடவடிக்கை; போராட்டம் தொடரும்” - சிஐடியு திட்டவட்டம்
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரைந்த காவல் துறை
- தொடர் மழையால் ரீரங்கம் கோவிலை சுற்றி தேங்கிய மழைநீர்... பக்தர்களும், வாகன ஓட்டிகளும் அவதி
- கோவை வால்பாறையில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் யானைகள் - எச்சரிக்கையுடன் இருக்கும்படி மக்களுக்கு வனத்துறை அறிவுரை
- நகராட்சி நிர்வாக நேர்முக தேர்வு தேதியை மாற்றம் செய்ய தமிழக அரசு திட்டம்
- சென்னை அடுத்த பம்மல் அருகே 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 58 வ்யது நபர் கைது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion