TN Rain: 27 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு..! முன்னெச்சரிக்கையாக இருங்க..!
தமிழ்நாட்டில் உள்ள 27 மாவட்டங்களில் , இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 27 மாவட்டங்களில் , இன்று இரவு 10.30 மணிவரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
27 மாவட்டங்கள்:
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், விழுப்புரம், கடலூர், விருதுநகர், தென்காசி, நெல்லை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் சிவகங்கை ஆகிய 27 மாவட்டங்களில் இரவு 10. 30 மணிவரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 30, 2024
ரெட் அலர்ட்:
தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாவட்டங்களிலும் மிக மிக கனமழை பெய்யும் எனவும், நாளையும், நாளை மறுநாளும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 செ.மீ.க்கு மேல் மழை பொழிவு இருக்கும் என்பதால், கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.