எண்ட்ரி தரும் புதிய காற்றழுத்தம்.! துல்லியமாக ஏன் கணிக்க முடியவில்லை? எங்கெல்லாம் ரெட் அலர்ட்.!
TamilNadu Rain Updates Today And Tomorrow: வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவும் நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், எந்த மாவட்டங்களில், எததனை நாட்களுக்கு அதிகன மழை பெய்யக் கூடும் என்றும்? , எதானால் வானிலையை துல்லியமாக கணிக்க முடியவில்லை என்றும்? பார்ப்போம்.
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி:
இன்று செய்தியாளர்களை சந்தித்த தென் மண்டல வானிலை மையம் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்ததாவது, “ வரும் 15 ஆம் தேதி அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழை ஜனவரி 15 ஆம் தேதி வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது. ( வடகிழக்கு பருவமழை காலம், இயல்பாக – அக்டோபர் மாதம் தொடக்கம் முதல் டிசம்பர் மாதம் கடைசி வரை ).
இதுவரையிலான காலகட்டத்தில், வடகிழக்குப் பருவ மழையால இயல்பை விட 16 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளது.
வானிலையை ஏன் துல்லியமாக கணிக்க முடியவில்லை?
வானிலை பலவிதமான காரணிகளை கொண்டிருப்பதால், துல்லியமாக கணிக்க முடியவில்லை. இன்றைய சூழலில் புயல் மழை போன்றவற்றை கணிப்பது குறித்து , முழுமையாக அறிவியல் இல்லை ; செயற்கைகோள்கள் , கண்ணி மாதிரிகளை வைத்தே வானிலை நிலவரங்களை கூறுகிறோம். புயலுக்குள் விமானங்களை அனுப்பி விவரங்களை பெற்றும் கூட கணிப்பு செய்யப்படுகிறது. அதுவும் சில நேரங்களில் தவறாகி விடுகிறது. தொழில்நுட்பம் மட்டுமே வானிலை நிலவரங்களை கணிக்க உதவாது. தொழில்நுட்பத்துடன் அறிவியலும் மேம்பட வேண்டும்.
தற்போதைய காற்றழுத்த தாழ்வுப் பகுதி:
இந்நிலையில், வங்க கடலில் தற்போது நிலவி கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் வலு குறையும்.இந்நிலையில், தென் தமிழக மாவட்டங்களில் நாளை கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அடுத்த 7 நாட்களில் எங்கெல்லாம் கனமழை பெய்யும்?
இன்று மழை பெறும் மாவட்டங்கள்:
தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
13-12-2024:
தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
13.12.2024:
தென்தமிழகத்தில் அநேக இடங்களில், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி,கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், இராமநாதபுரம். சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
14.12.2024 மற்றும் 15.12.2024:
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
16.12.2024:
கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலூர்,மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர்,புதுக்கோட்டை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
17.12.2024:
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
18.12.2024:
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை :
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, கன - மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.