மேலும் அறிய

TN Rain: வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: ஆனால் தமிழ்நாட்டிற்கு கனமழை இருக்காது.? ஏன் தெரியுமா?

Tamilnadu Rain Updates: காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னைக்கு கிழக்கு, வடகிழக்கே 480 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழை நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து பார்ப்போம்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

நேற்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மாலை 5.30 மணி அளவில், ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது கிழக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று (21-12-2024) 08.30 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், விசாகபட்டினத்திற்கு (ஆந்திரா) தெற்கு-தென்கிழக்கே சுமார் 430 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு, வடகிழக்கே 480 கிலோ மீட்டர் தொலைவிலும், கோபல்பூரிற்கு (ஒரிசா) தெற்கே 590 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இது அடுத்த 12 மணி நேரத்தில், கிழக்கு-வடகிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மெதுவாக நகர்ந்து, அதன் பிறகு, கடலில் படிப்படியாக வழுவிழக்கக்கூடும்.

தமிழ்நாட்டிற்கு கனமழைக்கு வாய்ப்பு இல்லை:


காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, தமிழ்நாட்டைவிட்டு தூரமாக சென்றுவிட்டது. அதாவது சென்னை கடல்பகுதிக்கு வடக்கே சென்றுவிட்டது. ஆகையால், காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாட்டிற்கு கனமழைக்கு வாய்ப்பு இல்லை.  வட பகுதியில் உள்ள மாநிலங்களுக்குதான் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் 

அடுத்த 7 நாட்களுக்கு வானிலை:


21-12-2024 மற்றும் 22-12-2024, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

23-12-2024 மற்றும் 24-12-2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால், பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

25-12-2924: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

26-12-2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

27-12-2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வாளிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் . ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகாலையில் பனிமூட்டம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

விசிக மாநாட்டு மேடையில் திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல்.. உரையை பாதியிலேயே முடித்தார் திருமாவளவன்!
விசிக மாநாட்டு மேடையில் திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல்.. உரையை பாதியிலேயே முடித்தார் திருமாவளவன்!
மேடை உடைப்பு... தகர ஷீட் கிழிப்பு... உளுந்தூர்பேட்டை விசிக மாநாட்டில் நிலைகுலைந்த பாதுகாப்பு!
மேடை உடைப்பு... தகர ஷீட் கிழிப்பு... உளுந்தூர்பேட்டை விசிக மாநாட்டில் நிலைகுலைந்த பாதுகாப்பு!
அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !
அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !
வெளிநாட்டு மகள் தந்த பிரம்மாண்ட பரிசு: தாயின் 80-வது பிறந்தநாளில் 80 சீர்வரிசை, 2 லட்சம் பண மாலை!
வெளிநாட்டு மகள் தந்த பிரம்மாண்ட பரிசு: தாயின் 80-வது பிறந்தநாளில் 80 சீர்வரிசை, 2 லட்சம் பண மாலை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget