TN Rain Update : தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மழை..! எங்கெல்லாம் தெரியுமா..? முழு விவரம் உள்ளே..!
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. வெயில் வாட்டி வந்தாலும், வெயிலைத் தணிக்கும் விதமாக தொடர்ந்து மாநிலம் முழுவதும் இதமான மழை பெய்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு காவிரி, பவானிசாகர் ஆகிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“ தமிழ்நாட்டில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி வட தமிழக மாவட்டங்கள், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சிமலை மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஆகஸ்ட் 16-ந் தேதி முதல் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 17-ந் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் ஆகஸ்ட் 18-ந் தேதி நீலகிரி, கோவை, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் அடுத்த இரு நாட்களுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சென்னையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால் தமிழ்நாட்டின் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. சென்னைக்கு நீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகிய ஏரிகளிலும் போதியளவு நீர்மட்டம் இருப்பதால் இந்தாண்டு முழுவதும் நகரின் தேவைக்கு போதிய அளவு குடிநீர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : தனது ஓய்வூதியத்தை ராணுவ வீரர்களுக்கு அளித்த மூதாட்டி - திருவாரூர் சுதந்திர தினவிழாவில் நெகிழ்ச்சி
மேலும் படிக்க : மேட்டூர் அணை நிலவரம்: நீர்வரத்து மூன்றாவது நாளாக 85,000 கன அடியாக உள்ளது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்