TN Corona: கொரோனா அலைக்கு பிறகு இருதய நோய்கள், மாரடைப்பு மரணங்கள் அதிகரிப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனா அலைக்கு பிறகு இருதய நோய்கள் மற்றும் மாரடைப்பு மரணங்கள் நிறைய அளவில் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை தண்டையார்பேட்டையில் தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார்.
அப்போது, அவர் பேசியதாவது,
முயற்சியே காரணம்:
“சின்ன வயதில் இருந்து எனக்கு எந்த விளையாட்டிலும் ஆர்வம் இல்லை என்று.நான் ஒரு புத்தகப்புழு. அப்படி படிக்கும் காலங்களில் நான் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டேன். அதனால் போராடி வந்தேன், பின் ஒரு விபத்தில் சிக்கிக்கொண்டேன். நீங்கள் இன்றும் தினசரி நாளிதழை எடுத்து பார்த்தால் இருக்கும், மா.சுப்ரமணியன் கவலைக்கிடம் என்று. நீங்கள் இனிமேல் வேகமாக நடக்கவோ, சம்மணம் போட்டு அமரவோ கூடாது என்ற மருத்துவர் முன்பே, நான் பத்மாசனம் போட்டு அமர்ந்தேன். இதை சொல்ல காரணம், முயற்சி ஒன்றே ஆகும். ஓடுவதில் இன்று உலக சாதனை செய்திருக்கிறேன்.
கொரோனாவிற்கு பிந்தைய மரணங்கள்:
ஊட்டியில் கடந்த வாரம் தொடர்ந்து 30 கிலோ மீட்டர் தொலைவு ஓடினேன். தினமும் 10 முதல் 15 கிலோ மீட்டர் நடந்தால் தான் எனக்கு உணவு உண்ணவே முடியும். இரு வருடத்தில் 500 மணி நேரம் ஓட வேண்டும் என்று இலக்கு வைத்திருந்தேன். ஈரோடு தேர்தல், கடந்த மாதம் இன்புளூஎன்ஸா வைரஸால் பாதிக்கப்பட்டதால் ஓட முடியவில்லை. இந்த மாதம் இதுவரை 30 கிலோ மீட்டர் ஓடியிருக்கிரேன்.
கொரோனா அலைக்குப் பிறகு மாரடைப்பு, இருதயக் கோளாறு போன்ற மரணங்கள் நிறைய ஏற்பட்டது. ரூபாய் 12 கோடி ஒதுக்கி 3 மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. ஸ்டான்லி மருத்துவமனையில் இன்று மாற்று அறுவை சிகிச்சை சிறப்பான முறையில் செய்து வருகிறார்கள்.”
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறிதாவது,
பயமில்லை:
“அண்ணாமலை தொடர்ச்சியாக செய்துக் கொண்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். விதிமீறல்கள் இருக்கிறது என்றால் எல்லா துறைகளும் மத்திய அரசான அவர்களிடம் தான் உள்ளது அதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தலாம். சட்டத்துறை அமைச்சர் சொன்னது போல் மடியில் கணம் இல்லை வழியில் பயமில்லை.
நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட அந்த காவலரிடம் நானே தொடர்பு கொண்டு பேசினேன். 3 வயதிலிருந்து அந்த குழந்தைக்கு அவர் சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். அவர் ஒரு மருத்துவர் மீது குறை ஒன்றை வைத்தார், நடவடிக்கை எடுப்பதற்காக குழு ஒன்று நியமித்துள்ளோம். அதில் குறை இருக்கிறது என்று தெரிய வந்தால் சம்மந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.”
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை, தலைமை செயலகத்தின் முன்பு ஆவடியைச் சேர்ந்த தலைமை காவலர் ஒருவர் தனது 10 வயது மகளுடன் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் தன்து 10 வயது மகளுக்கு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சை காரணமாக வலிப்பு, பாதத்தில் அரிப்பு போன்ற சிக்கல்கள் ஏற்பட்டதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இந்த சூழலில், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ABP Nadu Anniversary: சிறப்புமிக்க 3-ஆம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் ஏபிபி நாடு.. வாழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின்
மேலும் படிக்க: எதிர்காலத்தை நோக்கிய நீண்ட பயணத்திற்கு வாழ்த்துகள்...ஏபிபி நாடு குடும்பத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் வாழ்த்து..!























