TN Headlines: 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை; தீபாவளி சிறப்பு பேருந்துகள் - முக்கிய செய்திகள் இதோ
TN Headlines: தமிழ்நாட்டில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
- Diwali Special Buses: தீபாவளி சிறப்பு பேருந்துகள்; முன்பதிவு முதல் ஊர் திரும்புவது வரை - முழு விவரம் விரிவாக உள்ளே!
தீபாவளி பண்டிகைக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு பேருந்துகள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், சென்னையில் எங்கெங்கு பேருந்துகள் இயக்கப்படும் என்ற தகவலை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ளார். நடப்பாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை பண்டிகை வரும் நிலையில் மக்கள் அனைவரும் பட்டாசு மற்றும் புத்தாடைகள் வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேசமயம் வெளியூரில் உள்ள பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல டிக்கெட் முன்பதிவுகளையும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் படிக்க
- TN Rain Alert: வீக் எண்டில் சில்லென மாறும் தமிழ்நாடு; அடுத்த 3 நாட்களுக்கு கனமழை அபாயம் - எந்தெந்த மாவட்டங்களில்?
இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யுக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. 28.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும் படிக்க
- ”பாரத மாதா என்றே சொல்கிறோம்.. இந்திய மாதா என்று இல்லை” - ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதில்
- Bangaru Adigalar: மேல்மருவத்தூர் பங்காடு அடிகளார் ஜீவ சமாதிக்கு நேரில் சென்ற இபிஎஸ்: பக்தி பரவசத்துடன் வழிபாடு..!
- Thevar Jayanthi: பசும்பொன்னில் இன்று தொடங்குகிறது தேவர் ஜெயந்தி, குருபூஜை - ஆயிரக்கணக்கான போலீஸ் குவிப்பு