TN Headlines: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்....கருவுற்ற தாய்மார்களுக்கு மீண்டும் உதவித்தொகை - முக்கிய செய்திகள்
TN Headlines: தமிழ்நாட்டில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை கீழே காணலாம்.
- Kandhasashti Festival: திருச்செந்தூரில் கோலாகலமாக தொடங்க இருக்கும் கந்தசஷ்டி திருவிழா.. பக்தர்களுக்கு உத்தரவிட்ட கோயில் நிர்வாகம்..
கந்த சஷ்டி விரதமிருந்து இவ்வாறு முருகனை வழிபட்டால் வீட்டின் கஷ்டங்கள் நீங்கி இன்பம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்று காலம் காலமாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கந்த சஷ்டி விரதம் இருக்கின்றனர். சஷ்டி விரத பலன்கள் சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருப்பது அவசியம். மேலும் படிக்க
- கருவுற்ற தாய்மார்களுக்கு மீண்டும் உதவித்தொகை.. மாஸ் அறிவிப்பை வெளியிட்ட அரசு..
கருவுற்ற பெண்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட உதவித்தொகை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மகப்பேறு நிதியுதவி திட்டம் படிப்படியாக இன்று இந்தியா முழுமைக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு உதவும் திட்டமாக மாறியுள்ளது. 2006ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ரூ.6000/- வழங்கப்பட்டு வந்தது. அதன்பிறகு 2011-2012 ரூ.12,000/- மற்றும் தற்பொழுது ரூ.18,000/- ஆக உயர்த்தி முதல் இரு கர்ப்பத்திற்கு ஐந்து தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. 2018 ஆம் ஆண்டு மத்திய அரசு தனது பங்களிப்பாக ரூ.3000 வழங்கியது. மேலும் படிக்க
- TN Rain Alert: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. குளுகுளு வானிலை அப்டேட்..
மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும். குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 08.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் படிக்க
- Omni Buses: சென்னை மக்களே அலர்ட்! நாளை முதல் ஆம்னி பேருந்துகளின் ரூட் மாற்றம்...இந்த 2 இடத்தை குறிச்சிக்கோங்க!
அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி நடப்பாண்டில் வரும் நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இந்த பண்டிகை வரும் நிலையில், அதற்கு மறுநாள் (நவம்பர் 13) ஆம் தேதி பொது விடுமுறையை தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதனால் வெளியூரில் இருந்து தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுக்க தொடங்கி உள்ளனர். மேலும் படிக்க
- ADMK - OPS Case: அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த தடை.. மேல்முறையீடு செய்யும் ஓபிஎஸ்..
அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட உள்ள மேல் முறையீட்டு வழக்கை நாளை மறுநாள் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் என தொடர்ந்து கூறிவருவதாகவும், இது தொண்டர்களிடையே குழப்பத்தை விளைவிப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் படிக்க